மணல் குவாரி அமைக்க எதிர்ப்பு தெரிவித்து தி.மு.க.வினர் கண்டன ஆர்ப்பாட்டம்

ஊத்துக்கோட்டை நகர எல்லையில் ஆரணி ஆறு பாய்கிறது. இந்த ஆற்றின் கரைகளில் 10-க்கும் மேற்பட்ட பகுதிகளில் பேரூராட்சி நிர்வாகம் ஆழ்துளை கிணறுகளை அமைத்து குடிநீர் வினியோகித்து வருகிறது.

Update: 2018-05-17 22:30 GMT
ஊத்துக்கோட்டை,

ஆற்றில் தண்ணீர் தேங்குவதன் காரணமாக அருகே உள்ள கிணறுகளில் தண்ணீர் கிடைப்பதால் விவசாயிகள் நெல், வேர்க்கடலை, கரும்பு போன்ற பயிர்களை சாகுபடி செய்து வருகின்றனர். இந்த நிலையில் தமிழக அரசு ஊத்துக்கோட்டை ஆரணி ஆற்றில் மணல் குவாரி அமைக்க முடிவு செய்து ஆரம்பகட்ட பணிகளை தொடங்கி உள்ளது. மணல் குவாரி தொடங்கினால் நிலத்தடி நீர் மட்டம் வெகுவாக குறைய வாய்ப்பு உள்ளது. மணல் குவாரி அமைக்க கூடாது என்று கூறி நேற்று ஊத்துக்கோட்டை கிராம நிர்வாக அலுவலகம் எதிரே கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவள்ளூர் வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் கி. வேணு ஆர்பாட்டத்துக்கு தலைமை தாங்கினார். அவைத்தலைவர் பகலவன், முன்னாள் அமைச்சர் சுந்தரம், முன்னாள் எம்.பி. கிருஷ்ணசாமி, முன்னாள் எம்.எல்.ஏ. சி.எச். சேகர், செயற்குழு உறுப்பினர் மூர்த்தி, பொதுக்குழு உறுப்பினர்கள் அபிராமிகுமரவேல், குணசேகர் முன்னிலை வகித்தனர். மாநில அமைப்பு செயலாளர் ஆலந்தூர் பாரதி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு கண்டன உரை நிகழ்த்தினார். இளைஞர் அணி அமைப்பாளர் லோகேஷ், நகர செயலாளர் அப்துல்ரஷீத், நிர்வாகிகள் மோகன், சம்சுதீன், அப்துல்ரகீம், சிராஜுதீன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்