காவிரி ஆற்றில் அனுமதியின்றி மணல் அள்ளிய பொக்லைன், 2 டிராக்டர்கள் பறிமுதல்

ஜேடர்பாளையம் அருகே, காவிரி ஆற்றில் அரசு அனுமதியின்றி மணல் அள்ளிய பொக்லைன் எந்திரம், 2 டிராக்டர்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

Update: 2018-05-19 22:45 GMT
பரமத்தி வேலூர்,

பரமத்தி வேலூர் தாலுகா ஜேடர்பாளையம் அருகே உள்ள கொத்தமங்கலம் காவிரி ஆற்றில் அரசு அனுமதியின்றி வாகனங்களில் மணல் அள்ளிச் செல்லப்படுவதாக ஜேடர்பாளையம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதன்பேரில் ஜேடர்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், சப்-இன்ஸ்பெக்டர் சின்னதுரை மற்றும் போலீசார் நேற்று முன்தினம் இரவு கொத்தமங்கலம் காவிரி ஆற்றில் திடீர் சோதனை மேற்கொண்டனர்.

3 வாகனங்கள் பறிமுதல்

அப்போது காவிரி ஆற்றில் இருந்து அரசு அனுமதியின்றி வாகனங்களில் மணல் அள்ளப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து மணல் அள்ளிய ஒரு பொக்லைன் எந்திரத்தையும், 2 டிராக்டர்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

மேலும் பொக்லைன் உரிமையாளர் கொத்தமங்கலம் அருகே உள்ள நஞ்சப்ப கவுண்டம்பாளையத்தை சேர்ந்த சண்முகம் மகன் நாட்ராயன் (வயது 34), டிராக்டர் டிரைவர்கள் கொத்தமங்கலத்தை சேர்ந்த மாரப்பன் மகன் கந்தசாமி (40), அதே பகுதியை சேர்ந்த தங்கராசு மகன் அருள் (35) ஆகிய 3 பேரிடமும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

மேலும் செய்திகள்