மோட்டார் சைக்கிள்கள் மோதல்: நாம் தமிழர் கட்சி பிரமுகர் சாவு

மோட்டார் சைக்கிள்கள் மோதிய விபத்தில் நாம் தமிழர் கட்சி பிரமுகர் பலியானார்.

Update: 2018-05-20 21:30 GMT

மதுரை,

மதுரை மேலவாசல் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் மதுரைவீரன் (வயது 45). நாம் தமிழர் கட்சி பிரமுகர். இவரும், இவருடைய நண்பர் போஸ் என்பவரும் திருப்பரங்குன்றம் செல்லும் சாலையில் உள்ள முத்துபாலத்தில் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தனர்.

அதேநேரத்தில் மானாமதுரையை சேர்ந்த சஞ்சீவ் என்பவர் அவருடைய மனைவியுடன் மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். இந்த 2 மோட்டார் சைக்கிளும் நேருக்குநேர் மோதிய விபத்தில் மதுரை வீரன் பரிதாபமாக இறந்தார். மற்ற 3 பேரும் காயம் அடைந்தனர். இதுகுறித்து கரிமேடு போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்