பழங்கால சிற்ப கலைகள் குறித்து பார்வையாளர்களுக்கு விளக்கம்

எழும்பூர் அரசு அருங்காட்சியகத்தில் பழங்கால சிற்ப கலைகள் குறித்து பார்வையாளர்களுக்கு விளக்கம் அளித்து வருகின்றனர்.

Update: 2018-05-21 00:04 GMT
சென்னை,

தமிழக அரசின் அருங்காட்சியகத்துறை சார்பில் சர்வதேச அருங்காட்சியக தின விழா கடந்த 19-ந்தேதி தொடங்கி 24-ந்தேதி வரை நடக்கிறது. இதையொட்டி எழும்பூரில் உள்ள அருங்காட்சியகத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு அந்த துறையின் இயக்குனர் கவிதா ராமு ஏற்பாடு செய்துள்ளார்.

அதன்படி அருங்காட்சியகத்தில் உள்ள கல் சிற்பங்கள், படிமங்கள், செப்பேடுகள் குறித்து வரலாற்று ஆய்வாளர் டாக்டர் சித்ரா மாதவன் நேற்று பார்வையாளர்களுக்கு விளக்கம் அளித்தார். தென்னிந்திய கோவில் கட்டிட கலையும், சிற்ப வேலைப்பாடு, சேர, சோழ, பாண்டியர் காலத்தில் வடிவமைக்கப்பட்ட கற்சிலைகள் சிறம்பசங்கள், வரலாறு போன்றவற்றை பட்டியலிட்டு கூறினார்.

பழங்கால சிற்ப கலைகள் பற்றி பார்வையாளர்கள் எழுப்பிய சந்தேகங்கள், கேள்விகளுக்கு தெளிவான பதிலை டாக்டர் சித்ரா மாதவன் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் எழும்பூர் அரசு அருங்காட்சியகத்தின் காப்பாட்சியர்கள் காளத்தி, பன்னீர்செல்வம் (தொல்பொருள் பிரிவு), சுந்தர்ராஜ் (நாணயவியல்) உள்பட அதிகாரிகளும், வெளிநாடு மற்றும் உள்நாட்டு பார்வையாளர்களும் அதிகளவில் பங்கேற்றனர்.

மேலும் செய்திகள்