ரெயில் நிலையத்தில் இருக்கை வசதி செய்து கொடுக்க வேண்டும்

பட்டுக்கோட்டை ரெயில் நிலைய டிக்கெட் முன்பதிவு செய்யும் இடத்தில் இருக்கை வசதி செய்து கொடுக்க வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2018-05-27 21:52 GMT
பட்டுக்கோட்டை,

பட்டுக்கோட்டை ரெயில் நிலையத்தில் டிக்கெட் முன்பதிவு மையம் தற்போது காலை 8 மணி முதல் மதியம் 1 மணி வரை இயங்கி வருகிறது. பட்டுக்கோட்டை, அதிராம்பட்டினம், மதுக்கூர், பேராவூரணி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து மாலை நேரங்களிலும் முன்பதிவு செய்ய பயணிகள் வருகிறார்கள். பிற மாநிலத்தவர்களும், குறிப்பாக வடமாநிலங்களுக்கு செல்வோரும் அதிக அளவில் இங்கு முன்பதிவு செய்து வருகிறார்கள். தற்போது பட்டுக்கோட்டை புதிய ரெயில் நிலையத்தில் முன்பதிவு மையம் இயங்கி வருகிறது. முன்பதிவு செய்ய வரும் பயணிகள் நலனை முன்னிட்டு ரெயில்வே நிர்வாகம் ஞாயிற்றுக்கிழமை உள்பட தினந்தோறும் ரெயில் டிக்கெட் முன்பதிவு நேரத்தை காலை 8 மணியிலிருந்து இரவு 8 மணி வரை நீட்டிக்க வேண்டும்.

மேலும் முன்பதிவு செய்யும் இடத்தில் இருக்கை வசதிகள் இல்லை. இதனால் முதியவர்கள், கர்ப்பிணி பெண்கள், மாற்றுத்திறனாளிகள் சிரமப்படுகின்றனர். எனவே பயணிகள் அமர இங்கு இடவசதி செய்து தர வேண்டும் என்று பயணிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்