பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த கோரி அரசு பணியாளர்கள் உண்ணாவிரதம்

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த கோரி திருவாரூரில் அரசு பணியாளர் சங்கத்தினர் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டனர்.

Update: 2018-06-08 23:00 GMT
திருவாரூர்,

திருவாரூர் ரெயில் நிலையம் முன்பு அரசு பணியாளர் சங்கம் சார்பில் உண்ணாவிரத போராட்டம் நேற்று நடந்தது. போராட்டத்துக்கு மாநில செயலாளர் பூபதி தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர்கள் சாமிநாதன், வெங்கடாசலம், மாவட்ட செயலாளர்கள் தர்மராஜ், பிரபாகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில தலைவர் சிவக்குமார் கலந்து கொண்டு பேசினார்.

உண்ணாவிரதத்தில் 21 மாத ஊதியக்குழு நிலுவை தொகையை வழங்க வேண்டும். பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்திட வேண்டும். ஓய்வூதியம் இல்லாத பணியாளர்களுக்கு ஓய்வூதியம் வழங்க வேண்டும். நிரந்தர ஊதியம் விகிதம் இல்லாத பணியாளர்களுக்கு பணி நிரந்தரம் மற்றும் காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் ஆகிய கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. உண்ணாவிரதத்தில் மாவட்ட பொருளாளர்கள் பிரகாஷ், ஈஸ்வரன், ராமலிங்கம், நிர்வாகிகள் குமார், ராமச்சந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்