மணல்குவாரிக்கு எதிர்ப்பு பொதுமக்கள் தொடர் உண்ணாவிரதம்

மணல்குவாரிக்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2018-06-08 23:05 GMT
திருத்தணி,

திருத்தணி தாலுகா திருவாலங்காடு ஒன்றியத்தை சேர்ந்த லட்சுமி விலாசபுரம் பகுதியில் மணல் குவாரி அமைக்கப்பட்டுள்ளது. தற்போது லட்சுமி விலாசபுரம், ஒரத்தூர், பாகசாலை பகுதி கொசஸ்தலை ஆற்று படுகையில் இருந்து பொக்லைன் எந்திரங்கள் மூலம் மணல் அள்ளப்பட்டு லாரிகள் மூலம் குவாரிக்கு அனுப்பப்படுகிறது. இது தொடர்பாக அந்த பகுதி மக்கள் திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் சுந்தரவல்லியிடம் கோரிக்கை மனு அளித்தனர். போராட்டங்கள் நடத்தினார்கள்.

தொடர் உண்ணாவிரதம்

இருப்பினும் வருவாய் துறையின் சார்பில் போலீஸ் பாதுகாப்புடன் கொசஸ்தலை ஆற்றில் இருந்து மணல் அள்ளப்படுகிறது. இதனால் அந்த பகுதி பொதுமக்கள் மணல்குவாரிக்கு எதிர்ப்பு தெரிவித்து பாகசாலை முருகன் கோவில் அருகில் தொடர் உண்ணாவிரத போராட்டம் நடத்தி வருகிறார்கள். 

மேலும் செய்திகள்