ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதி மேற்கு தொடர்ச்சி மலையில் 20–க்கும் மேற்பட்ட சிறுத்தைகள், கணக்கெடுப்பில் தகவல்

ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதி மேற்கு தொடர்ச்சி மலையில் 20–க்கும் மேற்பட்ட சிறுத்தைகள் இருப்பதாக மாவட்ட வனத்துறை அதிகாரி தெரிவித்தார்.

Update: 2018-06-10 21:45 GMT

ஸ்ரீவில்லிபுத்தூர்,

ஸ்ரீவில்லிபுத்தூர் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் சாம்பல்நிற அணில் சரணாலயம் உள்ளது. இங்கு பல்வேறு விலங்குகள் இருப்பது கண்டறியப்பட்டிருந்த நிலையில் வனப்பகுதியில் பொறுத்தப்பட்டு இருந்த தானியங்கி கேமராக்களின் பதிவை ஆய்வு செய்தபோது சிறுத்தைகளின் நடமாட்டம் இருப்பதும் தெரிந்தது.

 இதனைதொடர்ந்து ஆண்டுதோறும் சிறுத்தைகளை கணக்கெடுக்கும் பணி தேசிய புலிகள் காப்பக இயக்குனரகம் மூலம் நடந்து வருகிறது. இந்த ஆண்டும் தன்னார்வலர்களைக்கொண்ட 40 குழுக்களாக பிரிந்து காட்டுப்பகுதியில் இரவிலும் முகாமிட்டு கணக்கிட்டனர். இதனை மாவட்ட வனத்துறை அதிகாரி முகமது ஹவாப் தொடங்கி வைத்தார். சிறுத்தை கால் தடம், எச்சம் ஆகியவற்றை சேகரித்த இந்த குழுவினர் தங்களது அறிக்கையை சமர்ப்பித்தனர். சேகரித்தவற்றையும் அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். இதுகுறித்து அதிகாரி ஒருவர் கூறுகையில், இந்த பகுதியில் 20–க்கும் மேற்பட்ட சிறுத்தைகள் இருப்பதற்கான வாய்ப்பு இருப்பதாக தெரிவித்தார்.

மேலும் செய்திகள்