விபத்து வழக்கில் இழப்பீடு பெற ஆன்லைனில் ஆவணங்கள் பெறுவது குறித்த விழிப்புணர்வு முகாம்

விபத்து வழக்கில் இழப்பீடு பெறுவதற்கு, தேவையான ஆவணங்களை காவல்துறையில் இருந்து ஆன்லைன் மூலம் பெறுவது குறித்த விழிப்புணர்வு முகாம் வேலூர் கோர்ட்டில் நடந்தது.

Update: 2018-06-12 22:30 GMT

வேலூர்,

விபத்து வழக்கில் இழப்பீடு பெறுவதற்கு, தேவையான ஆவணங்களை காவல்துறையில் இருந்து ஆன்லைன் மூலம் பெறுவது குறித்த விழிப்புணர்வு முகாம் வேலூர் கோர்ட்டில் மாவட்ட நீதிபதி ஆனந்தி தலைமையில் நடந்தது. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பகலவன் மற்றும் நீதிபதிகள், வக்கீல்கள் கலந்து கொண்டனர்.

அதில் மாநில குற்ற ஆவண காப்பக கூடுதல் சூப்பிரண்டு ஸ்ரீதேவி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர், சாலை விபத்தில் இழப்பீடு பெறுவதற்கு, தேவையான ஆவணங்களை நாம் இருக்கும் இடத்தில் இருந்தே காவல்துறையிடம் இருந்து ஆன்லைன் மூலம் பெறலாம்.

இதனால் செலவு, நேரம் மிச்சமாகும். அதேபோல் தமிழ்நாடு காவல்துறை சார்பில் என்னென்ன சேவைகள் செய்யப்படுகிறது என்பதையும் தெரிந்து கொள்ளலாம். மேலும் தங்கள் பகுதி பொதுப் பிரச்சினை குறித்தும் ஆன்லைனில் பதிவு செய்யலாம். பொதுமக்கள் கொடுத்துள்ள புகார்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பதையும் ஆன்லைனில் பார்த்துத் தெரிந்து கொள்ளலாம், என விளக்கினார்.

மேலும் செய்திகள்