குழந்தை கடத்துவதாக வாட்ஸ்-அப்பில் வதந்தி பரப்பிய நகைக்கடை உரிமையாளர் கைது

ஆத்தூர், கெங்கவல்லி பகுதியில் குழந்தைகளை ஒரு கும்பல் கடத்துவதாக வாட்ஸ்-அப்பில் தகவல் பரவியது.

Update: 2018-06-13 22:45 GMT
கெங்கவல்லி,

ஆத்தூர், கெங்கவல்லி பகுதியில் குழந்தைகளை ஒரு கும்பல் கடத்துவதாக வாட்ஸ்-அப்பில் தகவல் பரவியது. கடந்த 4-ந் தேதி தெடாவூர் பகுதியில் குழந்தைகளை கடத்த வந்ததாக கருதி மனநிலை சரியில்லாமல் சுற்றித்திரிந்த 2 பேரை பொதுமக்கள் பிடித்து தாக்கினர். ஆனால் அவர்கள் குழந்தைகளை கடத்த வரவில்லை என்று தெரிந்தது. இருப்பினும் அவர்கள் காயம் அடைந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக கெங்கவல்லி போலீசார் விசாரணை நடத்தினர். இந்த நிலையில் ஆத்தூர் கடைவீதி வீரராகவர் தெருவை சேர்ந்த நகைக்கடை உரிமையாளர் கவுரி சங்கர், ஆத்தூர், கெங்கவல்லி சுற்றுவட்டார பகுதியில் குழந்தைகளை ஒரு கும்பல் கடத்தி உடல் உறுப்புகளை எடுத்து விற்பனை செய்து வருவதாகவும், தெடாவூர் பகுதியில் 14 குழந்தைகள் கடத்தப்பட்டு இருப்பதாகவும், கூறி வாட்ஸ்-அப்பில் தகவலை பரப்பியதும் தெரியவந்தது. இதனால் வாட்ஸ்-அப்பில் தவறாக பதிவு செய்த கவுரிசங்கரை கெங்கவல்லி போலீசார் நேற்று கைது செய்தனர். 

மேலும் செய்திகள்