திருவாரூரில் ரத்ததான தின விழிப்புணர்வு ஊர்வலம் கலெக்டர் நிர்மல்ராஜ் தொடங்கி வைத்தார்

திருவாரூரில் ரத்ததான தின விழிப்புணர்வு ஊர்வலத்தை கலெக்டர் நிர்மல்ராஜ் தொடங்கி வைத்தார்.

Update: 2018-06-14 22:30 GMT
திருவாரூர்,

உலக ரத்ததானத்தையொட்டி அரசு மருத்துவகல்லூரி சார்பில் திருவாரூர் ரெயில் நிலையத்தில் இருந்து விழிப்புணர்வு ஊர்வலம் புறப்பட்டது. ஊர்வலத்தை கலெக்டர் நிர்மல்ராஜ் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதில் மருத்துவகல்லூரி முதல்வர் மீனாட்சி சுந்தரம், மருத்துவ பணிகள் இணை இயக்குனர் உமா, சுகாதார பணிகள் துணை இயக்குனர் செந்தில்குமார், காசநோய் தடுப்பு துணை இயக்குனர் புகழ், மருத்துவகல்லூரி துணை கண்காணிப்பாளர் கண்ணன், துணை முதல்வர் ராஜா, ரத்த வங்கி மருத்துவ அலுவலர் டாக்டர் பிரதியுஷா மெரவாலா மற்றும் மருத்துவ மாணவர்கள் கலந்து கொண்டனர்.

ரெயில் நிலையத்தில் இருந்து புறப்பட்ட ஊர்வலம் பஸ் நிலையம், பனகல் சாலை, தெற்கு வீதி வழியாக நகராட்சி அலுவலகத்தை வந்தடைந்தது. இதனை தொடர்ந்து அரசு மருத்துவகல்லூரியில் நடந்த கருத்தரங்கில் முதல்வர் மீனாட்சி சுந்தரம் கலந்து கொண்டு பேசுகையில், ரத்ததானம் செய்வதன் அவசியம் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்கிற நோக்கத்துடன் விழிப்புணர்வு ஊர்வலம் நடத்தப்பட்டது என தெரிவித்தார். முன்னதாக சென்ற ஆண்டு அதிக அளவில் ரத்த தானம் செய்தவருக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது. முடிவில் எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அமைப்பின் மாவட்ட செயலாளர் விஜி நன்றி கூறினார். 

மேலும் செய்திகள்