கல்வி உதவித்தொகைக்கு பிற்படுத்தப்பட்ட, சீர்மரபினர் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் கலெக்டர் தகவல்

கல்வி உதவித்தொகை பெற பிற்படுத்தப்பட்ட, சீர்மரபினர் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் கந்தசாமி தெரிவித்து உள்ளார்.

Update: 2018-07-01 22:45 GMT
திருவண்ணாமலை,

கல்வி உதவித்தொகை பெற பிற்படுத்தப்பட்ட, சீர்மரபினர் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் கந்தசாமி தெரிவித்து உள்ளார்.

அரசு, அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்கள் மற்றும் தனியார் தொழிற் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டின்கீழ் பயிலும் பிற்படுத்தப்பட்ட, மிகப்பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர்மரபினர் மாணவ, மாணவிகளுக்கு தமிழக அரசு பல்வேறு திட்டங்களின்கீழ் கல்வி உதவித்தொகை வழங்கி வருகிறது. அரசு மற்றும் அரசு உதவி பெறும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இளங்கலை பட்டப்படிப்பு பயிலும் மாணவ, மாணவிகளுக்கு எவ்வித நிபந்தனையுமின்றி கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது.

முதுகலை, பாலிடெக்னிக், தொழிற்படிப்பு போன்ற பிற படிப்புகளுக்கு பெற்றோரது ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும். கல்வி உதவித்தொகை கோரி விண்ணப்பிக்கும் விண்ணப்பபடிவங்களை அவர்கள் பயிலும் கல்வி நிறுவனங்களிலேயே பெற்று வருகிற அக்டோபர் மாதம் 15-ந் தேதிக்குள் பூர்த்தி செய்து உரிய சான்றுகளுடன் கல்வி நிலையங்களில் சமர்ப்பிக்க வேண்டும்.

மாணவர்கள் தங்களின் வங்கி கணக்கு எண் மற்றும் ஆதார் எண் விவரங்களை தவறாது குறிப்பிட வேண்டும். மேலும் இந்த கல்வி உதவித்தொகை பெற புதுப்பித்தலுக்கான விண்ணப்பங்களை வருகிற நவம்பர் 30-ந் தேதிக்குள்ளும் அந்தந்த கல்வி நிறுவனங்கள் இணையதளம் மூலம் சமர்ப்பிக்க வேண்டும்.

மேலும் விவரங்களுக்கு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையின நல அலுவலகத்தை அணுகலாம். அரசு இணையதளமான www.tn.gov.in/bc-m-b-c-e-d-ept இதில் இந்த திட்டங்கள் குறித்த விவரங்கள் மற்றும் விண்ணப்பபடிவங்கள் உள்ளது. இந்த கல்வி உதவித்தொகை திட்டத்தில் மாணவ, மாணவிகள் உடனடியாக விண்ணப்பித்து பயன்பெறலாம்.

மேற்கண்ட தகவலை கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி தெரிவித்து உள்ளார்.


மேலும் செய்திகள்