கேரளாவுக்கு கடத்துவதற்காக பதுக்கி வைத்திருந்த ரேஷன் அரிசி பறிமுதல்

கேரளாவுக்கு கடத்துவதற்காக பதுக்கி வைத்த ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.

Update: 2018-07-08 23:41 GMT
கூடலூர்,

கூடலூர், கம்பம், சின்னமனூர் ஆகிய பகுதிகளை சேர்ந்த சிலர் குமுளி மலைப்பாதை வழியாக கேரளாவுக்கு தினசரி ரேஷன் அரிசி கடத்துவதாக அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து நேற்று அதிகாலை குமுளியில் உள்ள தமிழக எல்லைப் பகுதியில் உத்தமபாளையம் உணவுப்பொருள் வழங்கல் துறை அதிகாரி கண்ணன் தலைமையில் குழுவினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

அப்போது சாலையோரங்களில் அடர்ந்த செடி, கொடிகள் மறைவில் ரேஷன் அரிசி மூட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து தலா 25 கிலோ எடையுடன் 20 மூட்டைகள் கொண்ட ½ டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டு உத்தமபாளையம் உணவுப்பொருள் சேமிப்பு கிட்டங்கியில் ஒப்படைக்கப்பட்டது. மேலும் ரேஷன் அரிசியை கடத்துவதற்காக பதுக்கி வைத்த நபர்கள் யார்? என்று அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்