பொதுவினியோக திட்ட குறை தீர்க்கும் முகாம் நாளை மறுநாள் நடக்கிறது

நெல்லை மாவட்டத்தில் பொதுவினியோக திட்ட குறை தீர்க்கும் முகாம் நாளை மறுநாள் நடக்கிறது என்று கலெக்டர் ஷில்பா அறிவித்துள்ளார்.

Update: 2018-07-11 21:00 GMT
நெல்லை, 

நெல்லை மாவட்டத்தில் பொதுவினியோக திட்ட குறை தீர்க்கும் முகாம் நாளை மறுநாள் நடக்கிறது என்று கலெக்டர் ஷில்பா அறிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:–

குறை தீர்க்கும் முகாம் 

நெல்லை மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை மூலம் ஒவ்வொரு தாலுகா அளவில் ஒவ்வொரு கிராமத்திலும் இரண்டாவது சனிக்கிழமை பொதுவினியோக திட்டம் தொடர்பாக குறைதீர்க்கும் முகாம் நடத்தப்பட்டு வருகிறது.

அதன்படி நாளை மறுநாள் (சனிக்கிழமை) கீழ்கண்ட கிராமங்களில் பொதுவினியோக திட்ட குறை தீர்க்கும் முகாம் நடைபெறுகிறது.

நெல்லை தாலுகா சி.என்.கிராமம், பாளையங்கோட்டை தாலுகா கீழஓமநல்லூர், சங்கரன்கோவில் தாலுகா வலவந்தான், தென்காசி தாலுகா ஆயிரப்பேரி, செங்கோட்டை தாலுகா கலங்காதகண்டி, சிவகிரி தாலுகா பாறைப்பட்டி ஆகிய கிராமங்களில் நடைபெற உள்ளது.

நாங்குநேரி– ராதாபுரம் தாலுகா 

வீரகேரளம்புதூர் தாலுகா அச்சங்குட்டம், ஆலங்குளம் தாலுகா கரும்புளியூத்து, அம்பை தாலுகா ரெங்கசமுத்திரம், நாங்குநேரி தாலுகா பானாங்குளம், ராதாபுரம் தாலுகா பாம்பன்குளம், கடையநல்லூர் தாலுகா மலையடிகுறிச்சி, திருவேங்கடம் தாலுகா ஏ.கரிசல்குளம், மானூர் தாலுகா சீதைக்குறிச்சி, சேரன்மாதேவி தாலுகா முக்கூடல் ஆகிய கிராமங்களில் நடக்கிறது.

மேற்கண்ட கிராமங்களில் நடைபெறும் குறைதீர்க்கும் முகாமில் அந்தந்த பகுதி கிராம மக்கள் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது. 

மேலும் செய்திகள்