ரூ.5½ லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் மாவட்ட வருவாய் அலுவலர் விஜயா வழங்கினார்

வட்டத்தூரில் நடந்த மக்கள் தொடர்பு திட்ட முகாமில் ரூ.5½ லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட வருவாய் அலுவலர் விஜயா வழங்கினார்.

Update: 2018-07-12 23:29 GMT
சேத்தியாத்தோப்பு,


ஸ்ரீமுஷ்ணம் தாலுகாவுக்குட்பட்ட வட்டத்தூர் கிராமத்தில் தமிழக அரசின் மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடைபெற்றது. தாசில்தார் சாமிக்கண்ணு வரவேற்றார். உதவி வேளாண்மை அலுவலர் கோபி, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை பானு கோபால், சமூக நலத்துறை அலுவலர் புஷ்பாதேவி, மாவட்ட ஆதிதிராவிட பழங்குடியினர் நல அலுவலர் சண்முகசுந்தரம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.


முகாமுக்கு மாவட்ட வருவாய் அலுவலர் விஜயா தலைமை தாங்கி, தோட்டக்கலைத்துறை, வேளாண்துறை, வருவாய்த்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகள் மூலம் தேர்வு செய்யப்பட்டிருந்த பயனாளிகள் 111 பேருக்கு மொத்தம் ரூ.5 லட்சத்து 60 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கி சிறப்புரையாற்றினார்.

முன்னதாக வருவாய்த்துறை, சுகாதாரத்துறை உள்பட பல்வேறு துறைகளை சேர்ந்த அதிகாரிகள் தங்களது துறைகள் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து பொதுமக்களிடம் விளக்கி பேசினார்கள். இதில் அரசு அலுவலர்கள், ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். முடிவில் மண்டல துணை தாசில்தார் அருள் பிரகாசம் நன்றி கூறினார். 

மேலும் செய்திகள்