தமிழால் உயர்ந்த கேரள மாநிலத்தவர்!

கேரள மாநிலத்தை சேர்ந்தவர் தமிழால் தலை நிமிர்ந்துள்ளார்.

Update: 2018-07-13 21:15 GMT
தமிழ்நாட்டில் பலரும் தங்கள் குழந்தைகள் ஆங்கிலம் பயில ஆர்வம் காட்டுகின்றனர். தமிழில் படிப்பதையும், பேசுவதையும் கவுரவக் குறைவாக எண்ணுகின்றனர். ஆனால் தமிழே அறியாமல் மலையாளத்தில் 10-ம் வகுப்பு படித்தவர், கூலி வேலை செய்பவர், ஷாபி என்பவர். தமிழ் சினிமா சுவரொட்டிகள், தமிழ் நாளிதழ்களைப் படித்து தமிழைத் தானே கற்றுக்கொண்டார். இவர் கேரளா கோழிக்கோடு தாழக்கண்டியில் வசிக்கிறார். சாகித்திய அகாடமி விருது பெற்ற தோப்பில் முகமது மீரான் கதைகள் உள்பட 250-க்கும் மேற்பட்ட தமிழ்ச் சிறுகதைகள், 12 நாவல்களை மலையாளத்தில் மொழிபெயர்த்துள்ளார். தமிழ் மீது மிகுந்த பற்றும், விடாமுயற்சியும், உழைப்பும் கொண்ட ஷாபி, தமிழால் தலை நிமிர்ந்துள்ளார். 

மேலும் செய்திகள்