குழந்தைகள் பராமரிப்பு நிறுவனம் நடத்த விண்ணப்பிக்கலாம்

பெரம்பலூர் மாவட்டத்தில் குழந்தைகள் பராமரிப்பு நிறுவனம் நடத்த அரசு சாரா நிறுவனங்கள் விண்ணப்பிக்கலாம்.

Update: 2018-08-10 22:00 GMT
பெரம்பலூர், 


இது குறித்து பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் சாந்தா வெளியிட்டுள்ள ஒரு செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:-

ஒருங்கிணைந்த குழந்தை பாதுகாப்பு திட்டத்தின் கீழ் பெரம்பலூர் மாவட்டத்தில் 18 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளின் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பினை உறுதி செய்யும் வகையில் மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலகு, குழந்தை நலக்குழு, இளைஞர் நீதிக்குழுமம் போன்ற அமைப்புகள் செயல்பட்டு வருகின்றன.

பெரம்பலூர் மாவட்டத்தில், இளைஞர் நீதி (குழந்தைகள் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு) சட்டம் 2015 மற்றும் தமிழ்நாடு இளைஞர் நீதி (குழந்தைகள் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு) விதிகள் 2017 மற்றும் ஒருங்கிணைந்த குழந்தை பாதுகாப்பு திட்டத்தின் திருத்தப்பட்ட வழிகாட்டு நெறிமுறைகளில் தெரிவிக்கப்பட்டுள்ள குறைந்தபட்ச தர வசதிகளுடன் கூடிய 18 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளை பராமரிக்கும் நிறுவனம் நடத்துவதற்கு அரசு சாரா நிறுவனங்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்ப படிவம் மற்றும் குறைந்தபட்ச தர வசதிகள் குறித்த விவரங்களுக்கு மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலகு, எண்.164, எம்.எம்.பிளாசா, திருச்சி மெயின் ரோடு, பெரம்பலூர் என்ற முகவரியில் அணுகி பயன்பெறலாம்.

இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்