திரையரங்குகளில் அரசு நிர்ணயம் செய்ததை விட கூடுதலாக கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை

திரையரங்குகளில் அரசு நிர்ணயம் செய்ததை விட கூடுதலாக கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என நாகை மாவட்ட கலெக்டர் சுரேஷ்குமார் எச்சரிக்கை விடுத்துள்ளனார்.

Update: 2018-08-11 22:15 GMT
நாகப்பட்டினம்,

நாகை மாவட்டத்தில் அனைத்து திரையரங்குகளிலும் அரசு நிர்ணயம் செய்த டிக்கெட் கட்டணம் வசூல் செய்ய வேண்டும். அதன்படி குளிர்சாதன வசதி உள்ள திரையரங்குகளில் அதிகபட்சமாக ரூ.100-ம், குறைந்தபட்சமாக ரூ.40-ம் டிக்கெட் கட்டணமாக வசூலிக்கவேண்டும்.

குளிர்சாதன வசதி இல்லாத திரையரகுகளில் அதிகபட்சமாக ரூ.80-ம், குறைந்தபட்சமாக ரூ.30-ம் டிக்கெட் கட்டணம் வசூலிக்க வேண்டும். இதுகுறித்து அனைத்து திரையரங்கு உரிமையாளர்களுக்கும் ஏற்கனவே ஆணையிடப்பட்டுள்ளது. இதை மீறி அரசு நிர்ணயம் செய்ததை விட கூடுதலாக கட்டணம் வசூல் செய்வதாக புகார் வந்தால் சம்பந்தப்பட்ட திரையரங்கு உரிமையாளர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

மேலும் செய்திகள்