வருவாய்த்துறையில் தொடர்ந்து 2 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றும் அலுவலர்களை இடமாற்றம் செய்யவேண்டும், அலுவலர்கள் சங்கம் வலியுறுத்தல்

வருவாய்த்துறையில் தொடர்ந்து, 2 ஆண்டுகளுக்குமேல் பணியாற்றும் அனைத்து நிலை அலுவலர்களையும் இடமாற்றம் செய்ய வேண்டும் என்று அலுவலர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

Update: 2018-08-12 22:45 GMT

சிவகங்கை,

சிவகங்கையில் தமிழ்நாடு வருவாய்த்துறை (குரூப் 2) நேரடி நியமன அலுவலர்கள் சங்க செயற்குழு மற்றும் மாநில நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் சிவகங்கையில் மாநிலத் தலைவர் சையது அபுதாகிர் தலைமையில் நடைபெற்றது. மாநில பொதுச்செயலாளர் தர்மராஜ் முன்னிலை வகித்தார். மாவட்டச் செயலாளர் நாகேந்திரமுருகன் வரவேற்றார்.கூட்டத்தில், நிர்வாகிகள் சங்கர், ராமநாதன், பாரதி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்

கூட்டத்தில் கடந்த 2017–ம் ஆண்டு துணை வட்டாட்சியர் பட்டியல் தொடர்பாக சென்னை உயர்நீதி மன்ற மதுரை கிளை பிறப்பித்த உத்தரவை அமல்படுத்த வேண்டும். மாவட்ட வருவாய் அலகில் தொடர்ந்து, 2 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றும் அனைத்து நிலை அலுவலர்களையும் இடமாற்றம் செய்ய வேண்டும்.

துணை வட்டாட்சியர் பதவி உயர்வுக்கு தேவையான வருவாய் ஆய்வாளர் பயிற்சியை ஒரு ஆண்டாக குறைக்க வேண்டும்.கன்னியாகுமரி மாவட்டம் கல்குளம் வட்டத்தை நிர்வாக நலன் கருதி மூன்றாக பிரிக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முடிவில் கமருதீன் நன்றி கூறினார்.

மேலும் செய்திகள்