பவானி ஆற்றில் செல்லும் உபரிநீரை குளம்- குட்டைகளில் நிரப்ப வேண்டும் - கொ.ம.தே.க. கோரிக்கை

பவானி ஆற்றில் செல்லும் உபரிநீரை குளம், குட்டைகளில் நிரப்ப வேண்டும் என கொ.ம.தே.க. கோரிக்கை விடுத்துள்ளது.

Update: 2018-08-21 22:55 GMT
பவானி,

பவானியில் வெள்ளம் பாதித்த பகுதிகளை கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி செயலாளர் ஈஸ்வரன், பார்வையிட்டு பொதுமக்களுக்கு ஆறுதல் கூறினார். மேலும் பாதிக்கப்பட்டவர்களுக்கு உணவு பொட்டலங்கள், தண்ணீர் பாக்கெட்டுகள் போன்றவற்றை அவர் வழங்கினார். இதைத்தொடர்ந்து அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கடந்த 5 நாட்களாக பவானி ஆற்றில் உபரிநீர் அதிக அளவில் சென்று உள்ளது. இதன்காரணமாக ஏராளமான ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த வாழை, மஞ்சள், கரும்பு போன்ற பயிர்கள் தண்ணீரில் மூழ்கி அழுகிவிட்டன. எனவே பவானி ஆற்றில் செல்லும் உபரிநீரை கிளை வாய்க்கால் மூலமாக ஈரோடு, திருப்பூர் மாவட்ட பகுதிகளில் உள்ள குளம் மற்றும் குட்டைகளுக்கு கொண்டு சென்று நிரப்ப அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்கான திட்டத்தை உடனடியாக அரசு நிறைவேற்ற வேண்டும்.

இந்த திட்டத்தை நிறைவேற்றினால் உபரிநீரால் ஏற்படும் பாதிப்பு குறைவதோடு, ஈரோடு, திருப்பூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் உயரவும் வாய்ப்பு ஏற்படும். இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்