திருப்பத்தூரில் எல்.ஐ.சி. முகவர்கள் ஆர்ப்பாட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருப்பத்தூரில் எல்.ஐ.சி. முகவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2018-09-02 22:30 GMT

திருப்பத்தூர்,

எல்.ஐ.சி. பாலிசிதாரர்களுக்கு பாலிசியின் மீது வழங்கப்படும் போனஸ் தொகையை உயர்த்த வேண்டும், பிரிமிய தொகையின் மீதும், தாமத கட்டணத்தின் மீதும் விதிக்கப்படும் ஜி.எஸ்.டி. வரியை நீக்க வேண்டும், காலாவதியான பாலிசிகளை புதுப்பித்தலுக்கான கால அளவை 2 ஆண்டில் இருந்து 5 ஆண்டுகளாக மாற்ற வேண்டும், லாபம் ஈட்டும் நிறுவனங்களில் மட்டும் எல்.ஐ.சி. நிதியை முதலீடு செய்ய வேண்டும், ஐ.ஆர்.டி.ஏ. நிர்ணயித்துள்ள அளவிற்கு முகவர்களுக்கு கமி‌ஷன் தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருப்பத்தூரில் எல்.ஐ.சி. முகவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

 இந்த ஆர்ப்பாட்டத்திற்கு முகவர்கள் சங்க துணைத்தலைவர் பிரேம்குமார் தலைமை தாங்கினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் சங்க செயலாளர் வீரப்பன், மாவட்ட செயலாளர் சிவசுப்பிரமணியன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

 முடிவில் பொருளாளர் மகாலிங்கம் நன்றி கூறினார். இதனைத்தொடர்ந்து 7–ந்தேதி வரை ஆர்ப்பாட்டம் தொடரும் என்றும், எல்.ஐ.சி. வாரவிழாவை புறக்கணிக்க போவதாகவும் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்