திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மரக்கன்று நடும் விழா

திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் மரக்கன்று நடும் விழா நடந்தது. இதில் கூடுதல் தலைமை செயலாளர் கலந்துகொண்டார்.

Update: 2018-09-03 22:45 GMT
திருவள்ளூர்,

திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது. விழாவுக்கு கூடுதல் தலைமை செயலாளரும், வருவாய் நிர்வாக ஆணையருமான கோ.சத்திய கோபால் கலந்து கொண்டு மரக்கன்றுகளை நட்டு வைத்தார்.

பின்னர் அவர், பொதுமக்களிடம் சுற்றுச்சூழலை பாதுகாக்க மரக்கன்றுகள் நட்டு வைக்குமாறும், பிளாஸ்டிக் பயன்பாட்டை முற்றிலும் ஒழிக்க பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்கவேண்டும் எனவும் விழிப்புணர்வு ஏற்படுத்தினார். அத்துடன், பொதுமக்களுக்கு துணிப்பைகளையும் அவர் வழங்கினார்.

அதைதொடர்ந்து கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், வரஉள்ள வடகிழக்கு பருவ மழையை முன்னிட்டு மேற்கொள்ளவேண்டிய முன்னேற்பாடு நடவடிக்கைகள் குறித்து வருவாய்த்துறையினர் மற்றும் அரசு அதிகாரிகளுடன் அவர் கலந்தாய்வு செய்தார்.

இதில் திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார், மாவட்ட வருவாய் அலுவலர் சந்திரன், சப்-கலெக்டர் ரத்னா, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குனர் எஸ்.எஸ்.குமார், திருவள்ளூர் தாசில்தார் தமிழ்ச்செல்வன் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்