மாவட்ட செய்திகள்
உடற்பருமனை குறைக்க மாத்திரை சாப்பிட்ட பட்டதாரி பலி

நாக்பூர் எம்.ஐ.டி.சி. பகுதியில் உள்ள துர்கா நகரை சேர்ந்தவர் பரிதோஷ் சுரேஷ் (வயது 27). இவர் பயோ-டெக்னாலஜி பிரிவில் பட்டதாரி ஆவார். அரசு வேலைக்காக தேர்வு எழுத தயாராகி வந்தார்.
மும்பை,

பரிதோஷ் சுரேஷ் கடந்த 2017-ம் ஆண்டு ஏப்ரல் 4-ந் தேதி திடீரென மாயமானார். பின்னர் 4 நாட்களுக்கு பிறகு பேசா அருகே உள்ள கோகலி கிராமத்தை அடுத்த வனப்பகுதியில் பிணமாக மீட்கப்பட்டார். அவர் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்று பெற்றோர் புகார் அளித்தனர்.

போலீசார் கொலை, தற்கொலை, விபத்து உள்ளிட்ட கோணங்களில் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். விசாரணை மற்றும் தடய அறிவியல் சோதனை மூலம் அவர் கொலை செய்யப்படவில்லை என்பதும், தற்கொலை செய்து கொள்ளவில்ைல என்பதும் தெரியவந்தது.

இந்த நிலையில் 1½ ஆண்டுகளுக்கு பிறகு அவரது மர்மச்சாவில் துப்பு துலங்கி உள்ளது.

பரிேதாஷ் சுரேஷ் தனது உடல் எடை அதிகரித்ததை நினைத்து கவலை கொண்டுள்ளார். இதனால் செல்போன் மூலம் கூகுளில் உடற்பருமனை குறைப்பது எப்படி? என்பது பற்றிய தகவல்களை திரட்டி உள்ளார்.

அப்போது கூகுளில் கிடைத்த தகவலின்படி குறிப்பிட்ட மாத்திரையை சுயமாக வாங்கி சாப்பிட்டு வந்துள்ளார். அந்த மாத்திரையை அதிகளவு அவர் தின்ற காரணத்தினால் சம்பவத்தன்று வனப்பகுதிக்கு சென்றபோது அங்கு மயங்கி விழுந்து இறந்ததாக விசாரணையில் தெரியவந்து இருப்பதாக போலீசார் தெரிவித்தனர். 

தொடர்புடைய செய்திகள்

1. 4–வதும் பெண் குழந்தை என கருதி கருக்கலைப்பு செய்த கர்ப்பிணி சாவு; நர்ஸ் கைது
உசிலம்பட்டி அருகே 4–வதும் பெண் குழந்தை என கருதி கருக்கலைப்பு செய்த கர்ப்பிணி பரிதாபமாக இறந்தார். அவருக்கு கருக்கலைப்பு செய்த நர்ஸ் கைது செய்யப்பட்டார்.
2. மோட்டார் சைக்கிள் மீது கார் மோதி முன்னாள் கலெக்டரின் மகன் பலி
கோவையில் மோட்டார் சைக்கிள் மீது கார் மோதியதில் முன்னாள் கலெக்டரின் மகன் பலியானார். மற்றொரு விபத்தில் வங்கி மேலாளர் இறந்து போனார்.
3. மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த பட்டதாரி பெண் பலி
கோவில்பட்டியில் மோட்டார் சைக்கிளில் இருந்து சாலையில் தவறி விழுந்த பட்டதாரி பெண் லாரி சக்கரத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார். அவர், வேலைக்கு ஆன்லைனில் பதிவு செய்ய வந்த இடத்தில் இந்த கோர சம்பவம் நடந்துள்ளது.
4. வில்லியனூர் அருகே விபத்து: மோட்டார் சைக்கிள்கள் மோதல்; 2 வாலிபர்கள் பலி
வில்லியனூர் அருகே மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் 2 வாலிபர்கள் பலியானார்கள். மற்றொருவர் படுகாயமடைந்தார்.
5. யானை தாக்கியதில் படுகாயம் அடைந்த தொழிலாளி சிகிச்சை பலனின்றி சாவு
குடியாத்தம் அருகே யானை தாக்கியதில் படுகாயம் அடைந்த தொழிலாளி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.