சொத்து வரி செலுத்தாதவர்களுக்கு அதிக அபராதம் விதிக்க வேண்டும் : பரமேஸ்வர் உத்தரவு

சொத்து வரி செலுத்தாதவர்களுக்கு அதிக அபராதம் விதிக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு துணை முதல்-மந்திரி பரமேஸ்வர் உத்தரவிட்டுள்ளார்.

Update: 2018-09-04 23:45 GMT
பெங்களூரு,

பெங்களூரு மாநகராட்சி நிதித்துறை அதிகாரிகளுடன் துணை முதல்-மந்திரி பரமேஸ்வர் நேற்று பெங்களூருவில் ஆலோசனை நடத்தினார்.

இதில் பரமேஸ்வர் பேசியதாவது:-

பெங்களூருவில் நடப்பு ஆண்டில் இதுவரை ரூ.1,614 கோடி சொத்துவரி வசூலாகியுள்ளது. இன்னும் வணிக கட்டிடங்களிடம் இருந்து அதிகமான வரி பாக்கியுள்ளது. இன்னும் ரூ.2,828 கோடி சொத்து வரி வசூலிக்க வேண்டியுள்ளது. சொத்து வரி வசூலிக்க வருகிற மார்ச் மாதம் வரை காலஅவகாசம் உள்ளது.

அதற்குள் பாக்கி சொத்து வரியை வசூலிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். பாக்கி வரியை வசூலிப்பதில் சமரசத்திற்கு இடம் இல்லை. மண்டல அதிகாரிகள் வரியை வசூலிப்பதில் கவனம் செலுத்த வேண்டும்.

சொத்துவரி செலுத்தா தவர்களுக்கு அதிக அபராதம் விதிக்க வேண்டும். சொத்து வரி வசூலிப்பதில் இந்த முறை புதிய சாதனை படைக்க வேண்டும்.

இவ்வாறு பரமேஸ்வர் பேசினார்.

இதில் மேயர் சம்பத்ராஜ், மாநகராட்சி கமிஷனர் மஞ்சுநாத் பிரசாத் மற்றும் நிதித்துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர். 

மேலும் செய்திகள்