மாவட்ட செய்திகள்
சோனி நிறுவனத்தின் கையடக்க கேமரா

மின்னணு பொருள் தயாரிப்பில் முன்னணியில் உள்ள சோனி நிறுவனம் தனது சைபர் ஷாட் கேமரா வரிசையில் புதிய ரக கேமராவை அறிமுகம் செய்துள்ளது.
‘ஆர்.எக்ஸ். 100 வி.ஐ.’ மாடல் இந்தியாவில் தற்போது விற்பனைக்கு வந்துள்ளது. இதன்விலை ரூ.99,990 ஆகும். அதாவது ஒரு லட்சம் ரூபாய்க்கு 10 ரூபாய் குறைவு.

கையடக்கமான இந்த கேமரா 20 மெகா பிக்ஸெல் கொண்டது. எக்ஸ்மோர் ஆர்.எஸ்.சி.எம்.ஓ.எஸ்.இமேஜ் சென்ஸாரைக் கொண்டது. நீங்கள் புகைப்படம் எடுக்கும் பொருளை போக்கஸ் செய்தவுடன் அதை 0.03 வினாடிகளுக்கும் குறைவான நேரத்தில் லாக் செய்துவிடும் வகையிலான தொழில்நுட்பம் இதில் உள்ளது.

இதில் வீடியோ எடுக்கும் வசதியும் உள்ளது. இதில் ஸ்லோமோஷன் படப் பதிவுகளை எடுக்கும் வசதியும் உள்ளது. அதேபோல விரைவாகச் செல்லும் பொருள்களை படமெடுக்கும் வசதியும் உள்ளது. இது வை-பை இணைப்புடன் செயல்படக் கூடியது. ‘பிளே மெமரிஸ் மொபைல் ஆப்’ மூலம் ஸ்மார்ட்போன் படங்களை இதில் பார்க்கலாம்.

கையடக்கமாக பல்வேறு முன்னேறிய தொழில்நுட்பங்களுடன் வந்துள்ள இந்த கேமராவின் எடை 274 கிராம் ஆகும்.