மாவட்ட செய்திகள்
வயர் இல்லாத வாக்குவம் கிளனர்

நவீன உலகில் நமது வீட்டு உபயோக பொருட்களும் நவீனமாக இருக்க வேண்டியது கட்டாயமாகிறது.
வீட்டை மட்டுமின்றி நாம் பயன்படுத்தும் பொருட்களை சுத்தமாக வைத்திருக்க வேண்டியதும் அவசியமாகிறது. அது மாதிரியான சந்தர்ப்பங்களில் நாம் வழக்கமாக சுத்தப்படுத்தும் முறை ஓரளவுக்குத்தான் பயனளிக்கிறது. தொழில்நுட்ப முன்னேற்றத்தில் வந்துள்ள வாக்குவம் கிளனர்கள் அலுவலகங்களில் மட்டுமல்ல வீடுகளுக்கும் அவசியமானதாகிறது. அதிலும் ஆண், பெண், இருவரும் பணி புரியும் வீடுகளுக்கு அத்தியாவசியப் பொருட்களில் வாக்குவம் கிளனரும் அவசியம் என்றாகிவிட்டது.

டைசன் நிறுவனம் வயர்லெஸ் முறையிலான சைக்ளோன் வி-10 எனும் வாக்குவம் கிளனரை அறிமுகம் செய்துள்ளது. இதன் விலை ரூ. 44,900 ஆகும்.

பொதுவாக வாக்குவம் கிளனர்கள் மின் இணைப்பு வயரின் மூலம் செயல்படுத்தக் கூடியவையாக இருக்கும். ஆனால் டைசன் வாக்குவம் கிளனர் வயர் இணைப்பில் இன்றி, பேட்டரியில் இயங்கும் வகையில் வெளிவந்திருக்கிறது. அதனால் இதை வீட்டிற்கு உள்ளேயும், வெளியேயும் பயன்படுத்த முடியும். ஏற்கனவே வி-8 என்ற பெயரில் இந்நிறுவனம் முந்தைய மாடலை அறிமுகம் செய்தது. தற்போது மேம்பட்ட தன்மைகளோடு இது வெளிவந்துள்ளது. வீட்டிலுள்ள குப்பைகள் மட்டுமின்றி, படுக்கை, சோபா உள்ளிட்டவற்றில் படிந்துள்ள கண்ணுக்குத் தெரியாத கிருமிகளையும் (Bed Bug) இது உறிஞ்சிவிடும்.

பொதுவாக வாக்குவம் கிளனர்களில் உள்ள குப்பை சேகரித்த பகுதியை கைகளால் சுத்தப்படுத்த வேண்டியிருக்கும். ஆனால் இதில் அதற்கும் அவசியம் இல்லை. இதனால் உங்கள் கைகள் அழுக்காவது தவிர்க்கப்படுகிறது. தேவைக்கேற்ப நீட்டிக்கொள்ளவும், படுக்கை, சோபாக்களை சுத்தம் செய்யும்போது இதை சுருக்கிக்கொள்ளவும் முடிகிறது.

துப்பாக்கி போன்ற வடிவமைப்பு மட்டுமின்றி இதன் செயல்பாடும் சிறப்பாகவே உள்ளது. இதில் உள்ள பேட்டரி ஒரு மணி நேரம் செயல்படக்கூடியது. இதனால் ஒரு முறை சார்ஜ் செய்தால் வீட்டை முழுமையாக சுத்தம் செய்து விட முடியும்.