மாவட்ட செய்திகள்
மானூர் அருகே கார்– மோட்டார் சைக்கிள் மோதல்; டிராக்டர் டிரைவர் பலி

மானூர் அருகே கார்– மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் டிராக்டர் டிரைவர் பரிதாபமாக பலியானார்.
மானூர், மானூர் அருகே கார்– மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் டிராக்டர் டிரைவர் பரிதாபமாக பலியானார்.டிராக்டர் டிரைவர் நெல்லை மாவட்டம் மானூர் அருகே உள்ள கம்மாளங்குளத்தை சேர்ந்தவர் முத்து (வயது 47). டிராக்டர் டிரைவர். சம்பவத்தன்று இவர் ராமையன்பட்டியில் இருந்து தனது மோட்டார் சைக்கிளில் ஊருக்கு சென்று கொண்டிருந்தார். மானூர் அருகே உள்ள சிவாஜி நகர் பஸ் நிறுத்தத்திற்கு தென்புறம் சென்றபோது, அந்த பதியில் வந்த கார், முத்து மீது எதிர்பாராதவிதமாக மோதியது.பலி இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கிவீசப்பட்ட முத்து, பலத்த காயமடைந்து ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார். உடனே அருகில் இருந்தவர்கள் முத்துவை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.இதுகுறித்து மானூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, காரை ஓட்டி வந்த விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரை சேர்ந்த முனீஸ் என்ணு முத்து விஜயனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. மோட்டார் சைக்கிள்–மொபட் மோதல்; விவசாயி பலி
திட்டக்குடியில் மோட்டார் சைக்கிள்–மொபட் மோதிய விபத்தில் விவசாயி இறந்தார். இதில் 2 அதிகாரிகள் காயமடைந்தனர்.
2. பாளையங்கோட்டையில் அடுத்தடுத்து சம்பவம் ரெயிலில் அடிபட்டு 2 பேர் பலி
நெல்லையில் அடுத்தடுத்த சம்பவங்களில் ரெயிலில் அடிபட்டு 2 பேர் பலியானார்கள்.
3. கடம்பூர் அருகே ரோட்டோர மரத்தில் பஸ் மோதி கவிழ்ந்தது; வாலிபர் சாவு
கடம்பூர் அருகே ரோட்டோர மரத்தில் பஸ் மரத்தில் மோதி கவிழ்ந்ததில் வாலிபர் ஒருவர் இறந்தார். 20–க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்தார்கள்.
4. சிவகாசி அருகே சுவர் இடிந்து விழுந்து பலியான 74 ஆடுகள் ஒரே இடத்தில் புதைப்பு
சிவகாசி அருகே சுவர் இடிந்து விழுந்து பலியான 74 ஆடுகளும் ஒரே இடத்தில் புதைக்கப்பட்டன.
5. செங்கோட்டுகாவு அருகே ரெயிலில் அடிபட்டு கவுன்சிலர் சாவு
செங்கோட்டுகாவு அருகே ரெயிலில் அடிபட்டு கவுன்சிலர் பரிதாபமாக இறந்தார். செல்போனில் பேசியபடி தண்டவாளத்தை கடந்த போது இந்த பரிதாப சம்பவம் நடந்துள்ளது.