மயிலாடுதுறை கோர்ட்டில் சோபியா மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பாரதீய ஜனதா கட்சியினர் மனு

பாரதீய ஜனதா கட்சியை அவமானப்படுத்திய சோபியா மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மயிலாடுதுறை கோர்ட்டில் பாரதீய ஜனதா கட்சியினர் மனு தாக்கல் செய்து உள்ளனர்.

Update: 2018-09-05 23:00 GMT
மயிலாடுதுறை,

கடந்த 3-ம் தேதி பாரதீய ஜனதா கட்சியின் மாநில டாக்டர் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், கட்சி பணி தொடர்பாக சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு விமானம் மூலம் பயணம் செய்தார். தூத்துக்குடி விமான நிலையத்தில் தமிழிசை சவுந்தராஜன் இறங்கியபோது அவருக்கு பின்னால் வந்த தூத்துக்குடியை சேர்ந்தவரும், கனடா நாட்டில் ஆராய்ச்சி படிப்பு படித்து வருபவருமான சோபியா, தமிழிசை சவுந்தரராஜனையும், பாரதீய ஜனதா கட்சியையும் அவமானப்படுத்த வேண்டும் என்ற கெட்ட நோக்கத்தில் “பாசிச பாரதீய ஜனதா ஒழிக“ என்று அநாகரிகமாக பேசியுள்ளார்். இந்த செய்கை குற்றமுறை நடவடிக்கையின்படி தண்டிக்கத்தக்க செயலாகும்.

எனவே இந்த புகாரினை ஏற்றுக்கொண்டு சோபியாவுக்கு சம்மன் அனுப்பி, விசாரணை செய்து தக்க நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது. மனுவை பெற்றுக்கொண்ட மாஜிஸ்திரேட்டு வருகிற 7-ந் தேதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ள உத்தரவிட்டார். 

மேலும் செய்திகள்