மாவட்ட செய்திகள்
விநாயகர் சதுர்த்தியையொட்டி மும்பை, புனேயில் இருந்து 2,295 சிறப்பு பஸ்கள்

மராட்டியத்தில் விநாயகர் சதுர்த்தி வருகிற 13-ந்தேதி தொடங்கி 23-ந்தேதி வரை 11 நாட்கள் கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது.
மும்பை,

மும்பையில் வசிக்கும் வெளிமாவட் டங்களை சேர்ந்தவர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு சென்று விநாயகர் சதுர்த்தியை கொண்டாடுவார்கள். இவர்களின் வசதிக்காக 2,295 சிறப்பு பஸ்களை அரசு போக்குவரத்து கழகம் அறிவித்து உள்ளது. இதில் 70 பஸ்கள் மட்டும் புனேயில் இருந்து இயக்கப்படுகிறது. மற்ற அனைத்து பஸ்களும் மும்பையில் இருந்து இயக்கப்பட உள்ளது.

மும்பையில் இருந்து இயக்கப்படும் பஸ்களில் பெரும்பாலானவை கொங்கன் பகுதியில் உள்ள சிந்துதுர்க், சாவந்த்வாடி, சிப்லுன், தாபோலி, ராஜாப்பூர், ராய்காட், ரத்னகிரி உள்ளிட்ட இடங்களுக்கு இயக்கப்ப டுகிறது. சிறப்பு பஸ்கள் இயக்குவதன் மூலம் ரூ.10 கோடி வருமானம் கிடைக்கும் என போக்குவரத்து கழக அதிகாரிகள் எதிர்பார்க்கின்றனர்.