போலி நிறுவனம் மூலம் ரூ.60 கோடி ஜி.எஸ்.டி. வரி ஏய்ப்பு

போலி நிறுவனம் மூலம் ரூ.60 கோடி ஜி.எஸ்.டி.வரி ஏய்ப்பு செய்த 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2018-09-07 23:15 GMT
மும்பை,

மும்பையில் செயல்பட்டு வரும் தனியார் நிறுவனம் ஒன்று வரிஏய்ப்பு செய்து உள்ளதாக ஜி.எஸ்.டி. அதிகாரிகளுக்கு தெரியவந்தது.

இது தொடர்பாக நடத்திய விசாரணையில் போலியான நிறுவனம் தொடங்கப்பட்டு அதன் மூலம் ரூ.60 கோடி அளவில் ஜி.எஸ்.டி. வரி செலுத்தாமல் மோசடி செய்யப்பட்டு இருந்தது தெரியவந்தது.

இது தொடர்பாக மிரா-பயந்தரை சேர்ந்த தணிக்கையாளர் ராஜேஷ் சர்மா, போலி நிறுவன உரிமையாளர் பாபுலால் சவுத்ரி மற்றும் தர்மேந்திர பாண்டேஆகிய 3 பேரை அதிகாரிகள் கைது செய்தனர்.

அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி நீதிமன்ற காவலில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

மேலும் செய்திகள்