மாவட்ட செய்திகள்
நியூட்டனின் ஆப்பிள் மரம் இன்று...

இங்கிலாந்தில் லிங்கன்ஷயர் பகுதியில் விஞ்ஞானி சர் ஐசக் நியூட்டன் புவியீர்ப்பு விசையைக் கண்டுபிடித்த ஆப்பிள் மரம் உள்ளது.
விஞ்ஞானி சர் ஐசக் நியூட்டன் 1666-ல் புவியீர்ப்பு விசையைக் கண்டுபிடிக்க முக்கியக் காரணமாக இருந்த ஆப்பிள் மரம், இங்கிலாந்தில் லிங்கன்ஷயர் பகுதியில் உள்ளது. இப்போதும்கூட உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலாப் பயணிகள் வந்து இந்த மரத்தைப் பார்வையிட்டுச் செல்கின்றனர். ஒருமுறை ஏற்பட்ட கடும் புயலையும் தாங்கி வளைந்தவாறு வளர்ந்துள்ளது இந்த மரம். இங்கு அமைக்கப்பட்டுள்ள பாதுகாப்பையும் மீறிச் சிலர் இதன் வேர் மற்றும் கிளைகளை நினைவுச் சின்னமாக எடுத்துச் செல்வதால் தற்போது இந்த மரம் சிறிது சிறிதாக அழிந்து வருகிறது. அரிய அறிவியல் கண்டுபிடிப்புக்கு வித்திட்ட இந்த மரத்தை மேலும் 400 ஆண்டுகளாவது பாதுகாக்க வேண்டும் என்ற முனைப்பில் விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர்.