சிறுமியை பலாத்காரம் செய்ய முயற்சி போக்சோ சட்டத்தில் வாலிபர் கைது

விழுப்புரத்தில் சிறுமியை பலாத்காரம் செய்ய முயன்ற வாலிபரை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.

Update: 2018-09-19 21:30 GMT
விழுப்புரம், 


விழுப்புரம் பகுதியை சேர்ந்த 6 வயதுடைய சிறுமி அதே பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 1-ம் வகுப்பு படித்து வருகிறாள். இவள் சம்பவத்தன்று மாலை தனது வீட்டின் அருகில் விளையாடிக் கொண்டிருந்தாள்.

அப்போது அங்கு வந்த விழுப்புரம் கே.கே.சாலை கணபதி நகரை சேர்ந்த அன்புசெழியன் மகன் பரணி என்கிற லட்சுமிநரசிம்மன் (23) என்பவர் அந்த சிறுமியை தூக்கிக்கொண்டு அதே பகுதியில் உள்ள ஒரு காலிமனைக்கு கொண்டு சென்று சிறுமியை பலாத்காரம் செய்ய முயன்றார்.

உடனே சிறுமி கூச்சல் போட்டாள். இந்த சத்தம் கேட்டதும் சிறுமியின் பெற்றோர் மற்றும் அக்கம், பக்கத்தினர் விரைந்து ஓடி வந்தனர். அவர்களை பார்த்ததும் பரணி அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். பின்னர் சிறுமியை அவளது பெற்றோர், சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

இதுகுறித்து சிறுமியின் பெற்றோர், விழுப்புரம் தாலுகா போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். புகாரின்பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் பரணி மீது போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். பின்னர் பரணியை விழுப்புரம் கோர்ட்டில் போலீசார் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். 

மேலும் செய்திகள்