மனிதநேய மக்கள் கட்சியினர் நூதன போராட்டம்

திருவாரூரில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து ஆட்டோவை கயிறு கட்டி இழுத்து சென்று நூதன முறையில் மனிதநேய மக்கள் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2018-09-21 21:45 GMT
திருவாரூர், 


பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் தினமும் உயர்த்தி வருகின்றன. இதனால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். மேலும் சரக்கு கட்டணம் உயர்ந்து அனைத்து பொருட்களின் விலைகள் உயர்ந்து வருகிறது. இதனால் ஏழை-எளிய மற்றும் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே பெட்ரோல், டீசல் விலை உயர்வை கட்டுப்படுத்த தவறிய மத்திய அரசை கண்டித்து போராட்டங்கள் நாடு முழுவதும் நடைபெற்று வருகின்றன.

இதன் தொடர்ச்சியாக திருவாரூர் பஸ் நிலையம் அருகில் மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு நகர செயலாளர் முகமது தம்பி தலைமை தாங்கினார். நகர தலைவர் ஹாஜாநஜ்புதீன், நகர துணைத்தலைவர் தமீமுன்அன்சாரி முன்னிலை வகித்தார். மாவட்ட தலைவர் பஜ்ஜிலுல்ஹக், மாவட்ட செயலாளர் குத்புதீன், த.மு.மு.க. மாவட்ட செயலாளர் நவாஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர். அப்போது மத்திய அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.

முன்னதாக பெட்ரோல், டீசல் விலை பாதிப்பை உணர்த்தும் வகையில் ஆட்டோவை கயிறு கட்டி இழுத்து சென்று பஸ் நிலையத்தினை சுற்றி வந்து நூதன முறையில் மனிதநேய மக்கள் கட்சியினர் ஆர்்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

மேலும் செய்திகள்