பிளாஸ்டிக் பொருட்களை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும்

பிளாஸ்டிக் பொருட்களை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும் என்று கலெக்டர் ரோகிணி கூறினார்.

Update: 2018-09-27 21:45 GMT
சேலம்,


மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம் சார்பில் சேலம் மாவட்டம் ஏற்காடு அடிவாரத்தில் தூய்மை பணி குறித்த விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.

இதற்கு கலெக்டர் ரோகிணி தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். முன்னதாக அந்த பகுதியில் சுத்தம் செய்யும் பணியையும் கலெக்டர் தொடங்கி வைத்தார்.

அப்போது அவர் கூறியதாவது:-

2014-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 2-ந் தேதி தூய்மை இந்தியா திட்டத்தை பிரதமர் நரேந்திரமோடி தொடங்கி வைத்தார். பள்ளி, கல்லூரிகளில் நவீன கழிப்பறை வசதிகள் ஏற்படுத்துவது, ரெயில் நிலையங்கள், பொது இடங்களில் தூய்மையை பராமரிப்பது ஆகியவை இத்திட்டத்தின் நோக்கமாகும்.

மகாத்மா காந்தியின் கனவை நனவாக்க அனைவரும் நாட்டை தூய்மைபடுத்துவது அவசியம். 2014-ம் ஆண்டு நாட்டின் தூய்மை 40 சதவீதமாக இருந்தது. தற்போது 90 சதவீதமாக உயர்ந்துள்ளது. எனவே பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்துவதை பொதுமக்கள், வியாபாரிகள் மற்றும் சுற்றுலா பயணிகள் உள்ளிட்ட அனைவரும் முற்றிலும் தவிர்க்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார். 

மேலும் செய்திகள்