நாகையில் மீனவர்கள் 6-வது நாளாக வேலை நிறுத்தம்

நாகையில் மீனவர்கள் 6-வது நாளாக நேற்று வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2018-10-08 21:45 GMT
நாகப்பட்டினம், 

இலங்கை கடற் கொள்ளையர்களால் தமிழக மீனவர்கள் தொடர்ந்து தாக்கப்படுவதை கண்டித்தும், விசைப்படகு ஒன்றுக்கு 3 ஆயிரம் லிட்டர் மானிய டீசல் வழங்க வேண்டும், சிறிய படகுகளுக்கு 420 லிட்டர் மானிய டீசல் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நாகையில் விசைப்படகு மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று 6-வது நாளாக வேலை நிறுத்த போராட்டம் நீடித்தது. இதனால் நாகை மாவட்டத்தில் 3 ஆயிரத்து 500 விசைப்படகுகளும், 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பைபர் படகுகளும் துறைமுக பகுதிகளிலும், கடுவையாற்று கரையிலும் பாதுகாப்பாக நிறுத்தி வைத்துள்ளனர். தொடர் வேலை நிறுத்தத்தால் மீன்பிடி தொழில் சார்ந்த தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மீனவர்கள் வேலை நிறுத்தத்தால் எப்போதும் பரபரப்பாக காணப்படும் அக்கரைப்பேட்டை மீன் இறங்கு தளம் மக்கள் கூட்டம் இன்றி வெறிச்சோடி கிடந்தது. மேலும் பல கோடி ரூபாய் வர்த்தகமும் பாதிக்கப்பட்டுள்ளது. 

மேலும் செய்திகள்