மஞ்சபேட்டையில் புதிய ரேஷன் கடை கட்டக்கோரி பொதுமக்கள் சாலை மறியல்

மஞ்சபேட்டையில் புதிய ரேஷன்கடை கட்டக்கோரி பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Update: 2018-10-12 22:30 GMT
கந்தர்வக்கோட்டை,

கந்தர்வகோட்டை தாலுகா மஞ்சபேட்டை கிராமத்தில் தற்சமயம் ரேஷன் கடை செயல்பட்டு வருகிறது. இந்த ரேஷன்கடைக்கு புதிய கட்டிடம் கட்ட அரசு நிதி ஒதுக்கியது. இதையடுத்து இந்த புதிய ரேஷன் கடை கட்டும் பணி மஞ்சபேட்டையில் இருந்து வெகுதொலைவில் உள்ள இடத்தில் நடந்து வருகிறது. இதனால் மஞ்சப்பேட்டை கிராம பொதுமக்கள் இந்த கிராமத்திலேயே புதிய ரேஷன்கடையை கட்ட வேண்டும் என சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்தனர். இருப்பினும் எந்த நட வடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இதனால் ஆத்திரமடைந்த கிராம பொதுமக்கள் தஞ்சாவூர் - புதுக்கோட்டை தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்த கந்தர்வகோட்டை வட்டவழங்கல் அதிகாரி செல்வகணபதி, மஞ்சபேட்டை கிராம நிர்வாக அதிகாரி கருப்பையா போலீஸ் சப்-இன்பெக்டர் பிரபு ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் 2 நாட்களில் கூட்டம் கூட்டி முக்கி முடிவு எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். இதில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் அரைமணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்