நெல்லையில் ஹலோ எப்.எம். நடத்திய “லேடீஸ் டே” நிகழ்ச்சியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு

நெல்லையில் ஹலோ எப்.எம். நடத்திய “லேடீஸ் டே” நிகழ்ச்சியில் வெற்றி பெற்றவர்களுக்கு, மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக துணைவேந்தர் பாஸ்கர் பரிசுகள் வழங்கினார்.

Update: 2018-10-13 22:00 GMT
நெல்லை, 

நெல்லையில் ஹலோ எப்.எம். நடத்திய “லேடீஸ் டே” நிகழ்ச்சியில் வெற்றி பெற்றவர்களுக்கு, மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக துணைவேந்தர் பாஸ்கர் பரிசுகள் வழங்கினார்.

“லேடீஸ் டே” நிகழ்ச்சி

ஹலோ எப்.எம்.106.4 சார்பில் “லேடீஸ் டே” எனும் மங்கையருக்கான மகிழ்ச்சி திருவிழாவை நெல்லை டவுன் சோனா மஹாலில் நடத்தியது. நெல்லை ராணி அண்ணா மகளிர் கல்லூரி முதல்வர் மைதிலி குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார்.

தொடர்ந்து நிகழ்ச்சியில் கொடுக்கும் பொருட்களையும், உபகரணங்களையும் வைத்துக் கொண்டு ஒலிபரப்பும் பாடல்களையும் சரியாக தொகுத்து ஆடும் தனி நடன போட்டி, அரங்கில் ஒலிபரப்பப்படும் வசனங்களுக்கு ஏற்ப நடித்துக் காட்டும் போட்டி ஆகியன நடந்தது. அதனை தொடர்ந்து இன்றைய காலகட்டத்தில் குடும்ப நிர்வாகத்தில் சிறப்பாக செயல்படுவது வேலைக்கு செல்லும் பெண்களா? அல்லது வீட்டில் இருக்கும் பெண்களா? என்ற தலைப்பில் ‘அல்லி தர்பார்‘ நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சியில் கவிஞர் கணபதி சுப்பிரமணியன் நடுவராக செயல்பட்டார்.

மேலும் ரங்கோலி, மெஹந்தி, பேஷன் ஷோ, பேஷன் வாக் போட்டி, பாட் பெயின்டிங், உறியடி, அதிர்ஷ்ட சக்கரம், கயிறு இழுத்தல், கிரிக்கெட் போட்டி என பல்வேறு போட்டிகள் நடந்தது. நிகழ்ச்சியின் நடுவில் நெல்லை கண்ணன் கலந்துகொண்டு பேசினார்.

பரிசளிப்பு விழா

பின்னர் பரிசளிப்பு விழா நடந்தது. மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பாஸ்கர் கலந்து கொண்டு, போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.

“லேடீஸ் டே” நிகழ்ச்சியில் பார்வையாளர்களாக கலந்து கொண்டவர்களில் நெல்லையை சேர்ந்த பெபா என்பவருக்கு முதல் பரிசாக எல்.இ.டி. டி.வி., கேரளாவை சேர்ந்த ஸ்டெல்லா என்பவருக்கு 2-ம் பரிசாக வாஷிங்மெஷின், சிவந்திபட்டியை சேர்ந்த அதிபா என்பவருக்கு மூன்றாம் பரிசாக பிரிட்ஜ் வழங்கப்பட்டது. இதில் திரளான பெண்கள் கலந்து கொண்டனர்.

சத்யா வழங்கிய ஹலோ எப்.எம். “லேடீஸ் டே” நிகழ்ச்சியை ஜி.ஆர்.டி. ஜூவல்லர்ஸ், போத்தீஸ், பாரத் ஸ்கேன்ஸ், சீயோன் பர்னிச்சர்ஸ் மற்றும் எலக்ட்ரானிக்ஸ், விஜய் ஹீரோ பைக்ஸ் ஆகியன இணைந்து வழங்கின.

மேலும் செய்திகள்