ஆவணங்கள் இன்றி இயக்கிய 10 ஆட்டோக்கள் பறிமுதல் வட்டார போக்குவரத்து அலுவலர் நடவடிக்கை

நாகை பகுதியில் ஆவணங்கள் இன்றி இயக்கிய 10 ஆட்டோக்களை வட்டார போக்குவரத்து அலுவலர் பறிமுதல் செய்தார்.

Update: 2018-10-13 22:45 GMT
நாகப்பட்டினம்,

நாகை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் ஆட்டோக்களில் அதிக பயணிகளை ஏற்றி கொண்டு செல்வதாக மாவட்ட கலெக்டர் சுரேஷ்குமாருக்கு புகார் வந்தது. இதை தொடர்ந்து கலெக்டர் உத்தரவின் பேரிலும், துணை போக்குவரத்து ஆணையர் உதயகுமார் அறிவுறுத்தலின் படியும் நாகை வட்டார போக்குவரத்து அலுவலர் அழகிரிசாமி தலைமையில், மோட்டார் வாகன இன்ஸ்பெக்டர் கருப்புசாமி மற்றும் அலுவலர்கள் நாகை பகுதிகளில் பல்வேறு இடங்களில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

இதில் நாகை-நாகூர் சாலையில் நடந்த சோதனையில், உரிய ஆவணங்கள் இன்றியும், அதிக பயணிகள் ஏற்றி கொண்டும், கூடுதல் இருக்கைகள் வைத்து கொண்டு அதிவேகமாக வந்தது தொடர்பாக 9 ஆட்டோக்கள் மற்றும் சரக்கு ஆட்டோ ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். இதை தொடர்ந்து பறிமுதல் செய்யப்பட்ட ஆட்டோக்கள்நாகை வட்டார போக்குவரத்து அலுவலகத்துக்கு கொண்டு வந்து நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

மேலும் செய்திகள்