அறிவியல் கண்காட்சியில் பழைய ரூபாய் நோட்டுகளை காட்சிப்படுத்திய எல்.கே.ஜி. மாணவி

அப்துல் கலாம் பிறந்தநாளையொட்டி கீழக்கரை முகைதீனியா மெட்ரிக் பள்ளியில் அறிவியல் கண்காட்சி நடைபெற்றது.

Update: 2018-10-16 22:30 GMT

கீழக்கரை,

கீழக்கரையில் அப்துல் கலாம் பிறந்தநாளையொட்டி முகைதீனியா மெட்ரிக் பள்ளியில் அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. இதில் எல்.கே.ஜி. மாணவி பாத்திமா ஹணியா பழமையான ரூபாய் நோட்டுகள் மற்றும் நாணயங்களை சேகரித்து கண்காட்சியில் காட்சிப்படுத்தினார். இதனை பார்வையிட்டவர்கள் மாணவியை பாராட்டினர். இதேபோன்று கண்காட்சியில் ஏராளமான குழந்தைகள் பங்குபெற்று பரிசுகளை வென்றனர். கண்காட்சியை முகமது சதக் பாலிடெக்னிக் முதல்வர் அலாவுதீன் தொடங்கிவைத்தார். ராமநாதபுரம் தாசில்தார் தமீமுல் அன்சாரி, அப்துல் கலாம் அறிவியல் குழுமம் தலைவர் முகமது ரபிக் சாதிக், ரோட்டரி சங்க தலைவர் சுந்தரம் மற்றும் பள்ளி தாளாளர் மெவுலா முகைதீன், முகைதீன் இப்ராகிம், செயலாளர் டாக்டர் ராசிதீன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்