கோவிலுக்குள் தண்ணீர் புகுந்தது ராமேசுவரம் பகுதியில் பலத்த மழை

ராமேசுவரம் பகுதியில் பெய்த பலத்த மழையால் கோவிலுக்குள் மழை நீர் புகுந்தது.

Update: 2018-10-20 21:30 GMT
ராமேசுவரம், 

ராமேசுவரம் பகுதியில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் மிக அதிகமாக இருந்தது.இந்நிலையில் ராமேசுவரம் பகுதியில் நேற்று காலை சாரல் மழையாக பெய்ய தொடங்கி பலத்த மழை பெய்தது. இதனால் கோவிலின் அம்பாள் சன்னதி பிரகாரம், கொடி மரம் அமைந்துள்ள மண்டபம் ஆகிய இடங்களில் மழை நீர் புகுந்து குளம் போல் தேங்கி நின்றது.

அம்பாள் சன்னதி கொடி மர மண்டபத்தில் இருந்து 2-ம் பிரகார வடிகால் பகுதியில் அடைப்பு ஏற்பட்டுள்ளதால் மழை நீர் செல்ல வழியில்லாமல் கொடி மரம் முன்பும்,பிரகாரத்திலும் தேங்கியது. மழை நீருடன் பக்தர்கள் தீர்த்தமாடும் நீரும் வடிகால் வழியாக செல்ல முடியாமல் அம்மன் சன்னதி கொடி மண்டபம் பிரகாரத்திற்குள் புகுந்தது.

மழைநீரில் நடந்து பக்தர்கள் கோவிலுக்குள் சென்று அம்பாளை தரிசனம் செய்து வந்தனர். ராமேசுவரம் கோவிலில் மழை நீர் வடிகால் அடைப்பு அகற்றப்படாமல் உள்ளதால் பிரகாரங்களில் மழை நீர் தேங்குவது வாடிக்கையாகி வருகிறது. இதே போல் தங்கச்சிமடம்,பாம்பன் பகுதியிலும் பலத்த மழை பெய்தது.தனுஷ்கோடி பகுதியில் கடல் கொந்தளிப்புடன் காணப்பட்டது. 

மேலும் செய்திகள்