வாடகைக்கு வாங்கிய கார்களை வெளிமாநிலங்களில் விற்று மோசடி; ஒருவர் கைது

வாடகைக்கு வாங்கிய கார்களை வெளிமாநிலங்களில் விற்று மோசடி செய்தவரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2018-10-21 21:30 GMT
மும்பை,

மும்பையை சேர்ந்தவர் அஸ்பக் நூர் அகமது சித்திக். இவர் சுற்றுலாவுக்காக கார்களை வாடகைக்கு தந்தால் அதற்காக அதிக தொகை தருவதாக விளம்பரம் செய்தார். இதை பார்த்த பலரும் தங்களிடம் இருந்த கார்களை அவரிடம் வாடகைக்கு விட்டு உள்ளனர்.

ஆனால் அவர் கூறியபடி கார் உரிமையாளர்களுக்கு பணம் எதுவும் கொடுக்கவில்லை. மாறாக அவர் வாடகைக்கு வாங்கிய கார்களின் வர்ணத்தை முதலில் மாற்றினார். பின்னர் அந்த கார்களுக்கு போலி ஆவணங்களை தயார் செய்து மத்திய பிரதேசம் மற்றும் குஜராத் மாநிலங்களில் அந்த கார்களை விற்று மோசடியில் ஈடுபட்டு வந்துள்ளார்.

அவர் தானே மற்றும் மும்பையை சேர்ந்தவர்களிடம் இருந்து கார்களை வாடகைக்கு வாங்கி இந்த மோசடியில் ஈடுபட்டு உள்ளார். இதை அறிந்த கார் உரிமையாளர்கள் சம்பவம் குறித்து போலீசில் புகார் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அஸ்பக் நூர் அகமது சித்திக்கை அதிரடியாக கைது செய்தனர்.

மேலும் அவரிடம் இருந்த ரூ.22 லட்சத்து 72 ஆயிரம் மதிப்புள்ள 4 கார்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

மேலும் செய்திகள்