ஈழத்தமிழர்கள் படுகொலைக்கு காரணமான ராஜபக்சேவை மன்னிக்க முடியாது - பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி

ஈழத்தமிழர்கள் படுகொலைக்கு காரணமான ராஜபக்சேவை மன்னிக்க முடியாது என பரமக்குடியில் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

Update: 2018-10-28 23:30 GMT

பரமக்குடி,

பரமக்குடியில் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது:–

 மத்தியில் ஆளும் மோடி அரசு இலவச எரிவாயு திட்டம், இலவச கழிப்பறை திட்டம், கர்ப்பிணி பெண்களுக்கான சிறப்பு திட்டங்கள், வங்கி கணக்கு தொடங்கி சேமிப்பு திட்டம் என பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி அதன்மூலம் வாழ்க்கை தரத்தை உயர்த்தி உள்ளது. இலங்கையில் ராஜபக்சே பிரதமர் ஆவதில் குழப்பம் நீடித்து வரு கிறது.

இலங்கையில் ஈழத்தமிழர்களை கொன்று குவித்ததில் முதல் குற்றவாளி ராஜபக்சே தான். அவரை ஒருபோதும் மன்னிக்க முடியாது. அதற்கு உறுதுணையாக அப்போது ஆட்சியில் இருந்த காங்கிரஸ்–தி.மு.க. கூட்டணி கட்சிகள் குற்றவாளிகள் தான். இப்போது ராஜபக்சேவும் அந்த உண்மையை சொல்லி நிரபராதியாக மாறிவிட்டார்.

தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் தாக்கப்படுவதும், அவர்களது வலைகள் அறுக்கப்படுவதும் தொடர்கதையாக நடந்து வருகிறது. இதுகுறித்து பேசி தீர்ப்பதற்கு 2 அமைச்சர்கள் குழு அமைக்கப்பட்டுள்ளது. விரைவில் நல்ல முடிவு காணப்படும். இலங்கை கடற்படையினரால் தாக்கி சேதமான படகுகளை மீட் பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. புண்ணியதலமான ராமேசுவரம்–மதுரை இடையே ரெயில்வே பாதையை இருவழிப்பாதையாக மாற்றியமைக்க ரெயில்வே துறையினரிடம் வலியுறுத்தப்படும்.

இவ்வாறு அவர் கூறினார். அப்போது பா.ஜ.க. ராமநாதபுரம் மாவட்ட தலைவர் முரளிதரன், மாநில செயலாளர் பொன்.பாலகணபதி மற்றும் நிர்வாகிகள் உடன் இ ருந்தனர்.

மேலும் செய்திகள்