முதல்–அமைச்சரை உண்மை கண்டறியும் சோதனைக்கு அழைப்பதா? கவர்னர் மீது உரிமை மீறல் புகார் - எம்.என்.ஆர்.பாலன் பேட்டி

முதல்–அமைச்சரை உண்மை கண்டறியும் சோதனைக்கு அழைத்தது தொடர்பாக கவர்னர் கிரண்பெடி மீது உரிமை மீறல் புகார் கொடுக்க உள்ளதாக எம்.என்.ஆர்.பாலன் எம்.எல்.ஏ. தெரிவித்துள்ளார்.

Update: 2018-10-30 00:15 GMT

புதுச்சேரி,

கவர்னர் கிரண்பெடி, முதல்–அமைச்சர் நாராயணசாமியை உண்மை கண்டறியும் சோதனைக்கு தயாரா? என சவால் விட்டுள்ளார். இதனை நான் வன்மையாக கண்டிப்பதுடன், உரிமை மீறலாக கருதுகிறேன். இதுதொடர்பாக உரிமை மீறல் புகார் அளிக்க உள்ளேன்.

சுற்றுலா வளர்ச்சி கழகத்தில் நடந்த ஊழல்கள் குறித்து கவர்னரை சந்தித்து நான் 3 முறை புகார் அளித்தேன். அதன்மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

குடிமைப்பொருள் வழங்கல் துறையில் இலவச அரிசிக்கு வைத்திருக்கும் பணத்தை கடனாக கேட்கிறோம். அந்த கடனை பாப்ஸ்கோவின் மதுபான கடைகளை தனியாருக்கு ஒப்பந்தம் கொடுத்து 2 மாதத்தில் அடைத்து விடுவோம்.

பட்ஜெட்டில் சம்பளத்திற்கு நிதி ஒதுக்கவில்லை என கூறி கோப்பை கவர்னர் திருப்பி அனுப்புகிறார். திட்டங்களை செயல்படுத்த விடமால் அரசு அதிகாரிகளை மிரட்டுகிறார். புதுவை அரசை பழிவாங்க வேண்டும் நோக்கில் கவர்னர் செயல்பட்டு வருகிறார். மேலும் அதிகார துஷ்பிரயோகம் செய்கிறார். கவர்னருக்கு பயந்து தான் தனியார் நிறுவனங்கள் சமூக பொறுப்புணர்வு நிதி கொடுக்கிறார்கள். கவர்னர் பதவியில் கிரண்பெடி இல்லை என்றால் யாரும் நிதி கொடுக்க முன் வரமாட்டார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்