மாவட்டத்தில் பரவலாக சாரல் மழை

தேனி மாவட்டத்தில் பரவலாக சாரல் மழை பெய்தது.

Update: 2018-11-03 23:00 GMT
தேனி,

தேனி மாவட்டத்தில் சில நாட்களாக சாரல் மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் மாவட்டத்தின் பல இடங்களில் பரவலாக சாரல் மழை பெய்தது. நேற்றும் தேனி, ஆண்டிப்பட்டி, கம்பம், கூடலூர், உத்தமபாளையம், போடி, பெரியகுளம் உள்ளிட்ட பகுதிகளில் சாரல் மழை பெய்தது. காலையில் இருந்தே விட்டு, விட்டு மழை பெய்து கொண்டே இருந்தது. இதனால் சாலையில் வாகனங்களில் சென்றவர்கள் குடைபிடித்தபடியும், தலையில் பாலித்தின் பைகளை மூடிய படியும் சென்றனர்.

மாவட்டத்தில் நேற்று முன்தினம் பெய்த மழை அளவு விவரம் (மில்லி மீட்டரில்) வருமாறு:-

போடி- 6, அரண்மனைப்புதூர்- 1.2, கூடலூர்- 5.3, பெரியகுளம்- 1.2, முல்லைப்பெரியாறு- 0.6, தேக்கடி- 16.8, சோத்துப்பாறை - 1, உத்தமபாளையம்- 7.3, வைகை அணை-0.6, வீரபாண்டி-3 என மழை பெய்துள்ளது.

மேலும் செய்திகள்