திப்பு ஜெயந்தி விழாவை எதிர்ப்பவர்கள் மதவாதிகள் சித்தராமையா பேட்டி

திப்பு ஜெயந்தி விழாவை எதிர்ப்பவர்கள் மதவாதிகள் என்று சித்தராமையா கூறினார்.

Update: 2018-11-10 23:00 GMT
மைசூரு, 

திப்பு ஜெயந்தி விழாவை எதிர்ப்பவர்கள் மதவாதிகள் என்று சித்தராமையா கூறினார்.

சித்தராமையா பேட்டி

பெங்களூருவில் இருந்து நேற்று மதியம் மைசூருவுக்கு வந்த சித்தராமையா மண்டஹள்ளி விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

பா.ஜனதாவுக்கு பிடிக்காது

நம் நாட்டில் பலர் பல்ேவறு மகான்களின் ஜெயந்தி விழாவினை கொண்டாடி வருகிறார்கள். இது பா.ஜனதாவினருக்கு பிடிக்காது. இந்த விழாக்களுக்கு எதிர்ப்பு தெரிவிப்பவர்களே உண்மையான மதவாதிகள்.

சாதியவாதிகள் தான் வன்முறையை தூண்டிவிடுபவர்களாக இருக்கிறார்கள். பா.ஜனதாவினர் சிலர் என்னை(சித்தராமையாவை) மதவாதிகள் என்று கூறுகின்றனர்.

நான் மதவாதி அல்ல

ஆனால் நான் மதவாதி அல்ல, எல்லா மதங்களையும்,சாதிகளையும் நேசிப்பவர்களே உண்மையான இந்துக்கள். இந்துக்கள் அனைத்து தர்மங்களையும் சகித்து கொள்பவர்கள். திப்பு ஜெயந்திக்கு எதிர்ப்பு தெரிவிப்பவர்கள் இந்துக்களா?

பா.ஜனதாவை சேர்ந்தவர்கள் நாக்கில் பிடிப்பு இல்லாமல் பேசுகிறார்கள். யாரை பற்றி எப்படி பேச வேண்டும் என்பதனை அறியாமல் பேசுகிறார்கள். அரசியல் லாபத்திற்காக பா.ஜனதாவினர் திப்பு ஜெயந்தியை எதிர்த்து கொண்டு இருக்கிறார்கள். இந்த எதிர்ப்பை மீறி மாநிலம் முழுவதும் இன்று (அதாவது ேநற்று) திப்பு ஜெயந்தி விழா அரசு சார்பில் சிறப்பாக கொண்டாடப்பட்டது.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்