செம்பட்டி அருகே: 4 மண்ணுளி பாம்புகள் பறிமுதல் - இலங்கை அகதிகள் 2 பேர் கைது

செம்பட்டி அருகே விற்பனை செய்ய பதுக்கி வைத்திருந்த 4 மண்ணுளி பாம்புகளை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக இலங்கை அகதிகள் 2 பேரை கைது செய்தனர்.

Update: 2018-11-12 22:00 GMT
கொடைரோடு, 

திண்டுக்கல் மாவட்டம், செம்பட்டி அருகேயுள்ள போடிகாமன்வாடி பிரிவு என்னுமிடத்தில் சொக்கலிங்க புரத்தை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி என்பவருக்கு சொந்தமான கோழிப் பண்ணை உள்ளது. இங்கு மண்ணுளி பாம்புகள் பதுக்கி வைத்து விற்பனை செய்ய இருப்பதாக மாவட்ட கியூ பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதன்பேரில் கியூ பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜோதிபாபு தலைமையில் போலீசார் கோழிப்பண்ணைக்கு சென்று விசாரணை நடத்தினர். அப்போது அங்கிருந்த கோழிப் பண்ணையின் பங்குதாரரான வத்தலக்குண்டுவை அடுத்த கே.புதுப்பட்டி இலங்கை அகதிகள் முகாமை சேர்ந்தவர் களான சுமன் (வயது 38), ஆட்டோ டிரைவர் பிரதீபன் (37) ஆகியோர் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்தனர். சந்தேகமடைந்த போலீசார் பண்ணையில் சோதனை நடத்தினர். அங்கு பைகளில் 4 மண்ணுளி பாம்புகள் பதுக்கி வைத் திருப்பது தெரியவந்தது. பாம்புகளை பதுக்கியது யாருக் கும் தெரியாமல் இருப்பதற்காக அந்த பையில் அரிசியை போட்டு வைத்து இருந்தனர்.

மண்ணுளி பாம்புகளை போலீசார் பறிமுதல் செய்த னர். மேலும் அவர்களிடம் விசாரணை நடத்தியதில் மண்ணுளி பாம்புகளை விற்பனை செய்வதற்காக வைத்திருப்பதை அவர்கள் ஒப்புக்கொண்டனர். உடனே போலீசார் அவர்களை கைது செய்தனர். பின்னர் அவர் களையும், பறிமுதல் செய்யப் பட்ட 4 மண்ணுளி பாம்பு களையும் கன்னிவாடி வனத் துறையினரிடம் போலீசார் ஒப்படைத்தனர். இதுகுறித்து வனத்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

மேலும் செய்திகள்