இலவச வீட்டுமனை கேட்டு தாலுகா அலுவலகத்திற்குள் நுழையும் போராட்டம் 90 பேர் கைது

இலவச வீட்டுமனை கேட்டு தாலுகா அலுவலகத்திற்குள் நுழையும் போராட்டத்தில் ஈடுபட்ட 90 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2018-11-19 23:00 GMT
கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி மாவட்ட இந்திய கம்யூனிஸ்டு கட்சி (மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட்) சார்பில், இலவச வீட்டுமனை கேட்டு 2 ஆண்டுகளாக போராடி வரும் ஏழை மக்களுக்கு இலவச வீட்டுமனை வழங்காத மாவட்ட நிர்வாகத்தை கண்டித்தும், நிலமற்ற ஏழை மக்களுக்கு இலவசமாக 3 சென்ட் வீட்டுமனை வழங்க வலியுறுத்தியும் கிருஷ்ணகிரி தாலுகா அலுவலகத்தில் நுழையும் போராட்டம் நேற்று நடந்தது.

இந்த போராட்டத்திற்கு கட்சியின் மாவட்ட செயலாளர் ஸ்டாலின்பாபு தலைமை தாங்கினார். மாநில அமைப்பாளர் இளங்கோ, மாவட்ட துணைத்தலைவர் துரைசாமி, மாநில குழு வெங்கடேஷ், மாவட்ட குழு உறுப்பினர் நிர்மலா, சுப்பிரமணி, ஒன்றிய குழு ரகுமணி, மருது, கனகராஜ், மாவட்ட குழு பிரபாகரன், பெருமாள் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.

இதில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த கட்சியினர் மற்றும் பொதுமக்கள் தாலுகா அலுவலகத்திற்குள் நுழைய முயன்ற 27 பெண்கள் உள்பட 90 பேரை போலீசார் கைது செய்தனர்.

மேலும் செய்திகள்