திருவண்ணாமலை தீபத்திருவிழா: திருப்பூரில் இருந்து 60 சிறப்பு பஸ்கள்

திருவண்ணாமலை தீபத்திருவிழாவுக்கு செல்லும் பக்தர்களின் வசதிக்காக திருப்பூரில் இருந்து 60 சிறப்பு பஸ்கள் இன்று(வியாழக்கிழமை) முதல் இயக்கப்படுகின்றன.

Update: 2018-11-21 22:42 GMT
திருப்பூர்,

திருவண்ணாமலையில் உள்ள அருணாச்சலேஸ்வரர் கோவிலில் தீபத்திருவிழா நாளை(வெள்ளிக்கிழமை) நடக்கிறது. இந்த விழாவில் பங்கேற்பதற்காக திருப்பூரில் இருந்து செல்லும் பக்தர்களின் வசதிக்காக தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் திருப்பூர் மண்டலம் சார்பில் சிறப்பு பஸ்கள் இன்று(வியாழக்கிழமை) காலை முதல் இயக்கப்பட உள்ளன.

திருப்பூர் பழைய பஸ் நிலையத்தில் இருந்து இந்த சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. திருவண்ணாமலைக்கு 60 சிறப்பு பஸ்களை இயக்குவதற்கு போக்குவரத்து கழக அதிகாரிகள் ஏற்பாடு செய்துள்ளனர். பக்தர்களின் வசதிக்காக முன்பதிவு வசதி செய்யப்பட்டுள்ளது. இன்று காலை முதல் பழைய பஸ் நிலையத்தில் உள்ள மையத்தில் முன்பதிவு செய்து கொள்ளலாம். நாளை வரை பஸ்கள் இயக்கப்படுகின்றன. பக்தர்களின் கூட்டம் அதிகமாக இருந்தால் கூடுதலாக பஸ்கள் இயக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறும்போது, 60 சிறப்பு பஸ்கள் திருவண்ணாமலைக்கு இயக்கப்படுகின்றன. நாளை(இன்று) காலை முதல் இந்த சிறப்பு பஸ்கள் இயக்கப்படும். முன்பதிவு வசதியை பக்தர்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். குழுவாக செல்பவர்கள் ஒரு பஸ்சை மொத்தமாக முன்பதிவு செய்ய முடியும். பக்தர்களுக்கு தேவையான விவரங்களை தெரிவிக்கும் வகையில் முன்பதிவு மையத்தில் ஊழியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர் என்றனர்.


மேலும் செய்திகள்