காஞ்சீபுரம் அருகே பள்ளியில் பாரம்பரிய உணவு திருவிழா

காஞ்சீபுரம் அருகே பள்ளியில் பாரம்பரிய உணவு திருவிழா நடைபெற்றது. காஞ்சீபுரம் மாவட்ட கல்வி அதிகாரி மகேஸ்வரி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

Update: 2018-12-02 22:00 GMT
காஞ்சீபுரம்,

காஞ்சீபுரம் மாவட்டம் வாலாஜாபாத் அகத்தியா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் 26-ம் ஆண்டு பாரம்பரிய உணவு திருவிழா நடைபெற்றது. இதற்கு பள்ளி செயலாளர் சாந்தி அஜய்குமார் தலைமை வகித்தார். முதல்வர் ஞானசுந்தரி முன்னிலை வகித்தார். காஞ்சீபுரம் மாவட்ட கல்வி அதிகாரி மகேஸ்வரி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

உணவு திருவிழாவில் துரித உணவுகளால் ஏற்படும் தீங்குகள் மற்றும் சத்தான உணவுகளால் ஏற்படும் நன்மை குறித்து விளக்கப்பட்டது. மண்பாண்ட சமையல், தானிய உணவுகள், மாவு சத்து உணவுகள், காய்கறி மற்றும் கீரை உணவு ஆகியவற்றின் அவசியம் குறித்தும் விளக்கி கூறப்பட்டது.

காஞ்சீபுரம் மெட்ரிக் பள்ளிகளின் துணை ஆய்வாளர் சிவகுமார் மற்றும் புனித தாமஸ் மலை பள்ளிகளின் துணை ஆய்வாளர் கிருபாகரன், முன்னாள் என்.ஜி.ஓ. சங்க தலைவர் அஜய்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

அகத்தியா பள்ளியில் உணவு திருவிழா மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்திய அகத்தியா பள்ளி நிர்வாக மாணவ, மாணவிகளுக்கு, மாவட்ட கல்வி அதிகாரி மகேஸ்வரி பாராட்டுகளை தெரிவித்தார்.

மேலும் செய்திகள்