குளித்தலை, அரவக்குறிச்சியில் மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டு போட்டிகள்

குளித்தலை, அரவக்குறிச்சியில் மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டி போட்டிகள் நடை பெற்றது.

Update: 2018-12-04 22:45 GMT
குளித்தலை,

குளித்தலை வட்டார வளமையம் சார்பில் ஒருங் கிணைந்த பள்ளி கல்வி திட்டத்தின்கீழ் குளித்தலை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் உலகமாற்றுத்திறனாளிகள் தின விழா கொண்டாடப்பட்டது. விழாவிற்கு பள்ளி தலைமை ஆசிரியை மஞ்சுளா தலைமை தாங்கினார். மாவட்ட உதவி திட்ட அதிகாரி ரவிச்சந்திரன் முன்னிலை வகித்தார். குளித்தலை வட்ட கல்வி அலுவலர் ராஜலெட்சுமி விளையாட்டுப் போட்டிகளை தொடங்கிவைத்தார்.

இவ்விழாவையொட்டி குளித்தலை பகுதியில் உள்ள பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த 1 முதல் 12 -ம் வகுப்பு வரை படிக்கும் 90 மாணவ, மாணவிகள், மாற்றுத் திறனாளி மாணவ, மாணவிகளுடன் இணைந்து ஓட்டபந்தயம், சக்கர நாற்காலி, பாட்டிலில் தண்ணீர் நிரப்புதல் உள்பட பல்வேறு விளையாட்டு போட்டிகளில் கலந்து கொண்டனர். இதையடுத்து மாணவ, மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது. கலைநிகழ்ச்சி மற்றும் போட்டிகளில் பங்கேற்ற அனைத்து மாணவ, மாணவிகளுக்கும் பரிசு பொருட்களும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை குளித்தலை வட்டார வளமைய மேற்பார்வையாளர் பொறுப்பு சித்ரா, ஆசிரியர் பயிற்றுனர்கள், சிறப்பாசிரியர்கள் ஆகியோர் நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை செய்திருந்தனர்.

ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி சார்பில் அரவக்குறிச்சி வட்டார வளமையத்தில் உலக மாற்றுத்திறனாளிகள் தினவிழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி மாற்றுத்திறனாளி மாணவ-மாணவிகளுக் கான விளையாட்டு போட்டிகள் நடந்தன. போட்டியை வட்டார வள மைய மேற்பார்வையாளர் (பொறுப்பு) சுதா தொடங்கிவைத்தார். தொடர்ந்து கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. பின்னர் போட்டிகள் மற்றும் கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்ற மாணவர்களுக்கு பள்ளி தலைமையாசிரியர் அந்தோணி அன்பரசு பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கினார். இதற்கான ஏற்பாடுகளையும் ஒருங்கிணைப்பாளர் மாரியம்மாள், சிறப்பாசிரியர்கள் செய்திருந்தனர். 

மேலும் செய்திகள்